வீட்டின்பின் கொட்டகை விதத்துக்கு நாலாகக்
கன்றுடன் ஆக்கள் நின்றால்
காட்டிடும் போதினில் வாய்த்திட்ட பெருமிதத்தை
கணக்கிடல் ஆவ தாமோ 1
ஒவ்வொரு தாய்ப்பசுவும் பால்தயிர் வெண்ணெயென்று
தரத்தர உண்டு மகிழ்வோம்,
ஒவ்வொரு ஆதந்த ஒவ்வொரு தயிருக்கும்
சுவையெனில் தனிச்சு வைதான்! 2
இந்நாளில் எங்குபோய் ஆவினை வளர்ப்பது.
இஃதொரு பெரிய நகரே,
பொன்னான தயிர்தன்னை ப் பல்கடைத் தொகுதியில்
போய்வாங்கி அருந்தத் தரமே. 3
ஒவ்வொரு குழும்பினரும் உருவாக்கி வெளியாக்கும்
ஒவ்வொரு தயிர் அடைப்பாவும்
வெவ்வேறு நம்மாடு என்றெண்ணி உண்டுவிடில்
மாடின்மை வருத்தாமை காண். 4
ஆக்கள் - பசுக்கள்
ஆவதாமோ - இயலாது
குழும்பினர் ( கம்பெனியார்)
பல்கடைத்தொகுதி --- "ஸுப்பர்மார்க்கட்"
அருந்தத்தரம்- அருந்த இயல்வதே
அடைப்பா - டப்பா ( அடைத்து வைக்கும் சிறு பாத்திரம் )
மாடின்மை -- வீட்டில் கொட்டகையில் மாடு இல்லாமல் வாழ்தல்
பொன்னான தயிர் - விரும்பப் படும் தயிர்.
தொடர்புடைய இடுகைகள்:
டப்பா டப்பி
https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_43.html
இது ஒரு பல்பிறப்பிச் சொல்:
அடைப்பி > டப்பி எனினுமாம் ( அடப்பி > டப்பி )
தடு > தடுக்கர், இது இடைக்குறைந்து "தக்கர்"/
தடுக்கை > இது இடைக்குறைந்து : தக்கை
இறைவனின் பெயரான அரங்கன் என்பது ரங்கன் என்று மாறிற்று.
அறு + அம் + பு + அம் = அறம்பம் > றம்பம் > ரம்பம் என்று திரிந்தது.
இறுதி அம் விகுதி. இதர இடைநிலைகள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.