உங்களுடன் உரையாடும் கவிதை:
சென்றமுந் நாளும்தாம் செந்தமிழில் சிந்தித்து
வந்தமுந் நற்கவிதை நான் தரவே ---- முந்திடினும்
ஆங்கெனை முந்தி அயர்வு முடக்கியதால்
நான்கிடந் தின்றெழுந் தேன்.
இனிநேரம் நன்றாயின் யானே எழுத
நனிமுயல்வேன் நம்பி வருவீர் ---- கனிபயந்த
சாறாய் அவைவருமே சற்றும் தயங்காமல்
நேராய் வருவீரே இங்கு.
சென்ற முந் நாளும் - சென்ற மூன்று நாட்களும்
வந்த முந்நற் கவிதை - தோன்றிய நல்ல மூன்று கவிதைகள்
நனி - நன்கு
கனி பயந்த சாறு --- கனிச்சாறு போல
நேராய் - எதற்கும் தயங்காமல். வேறு எங்கும் செல்லாமல்
இங்கு -- இந்த வலைப்பதிவுக்கு
நன்றி வணக்கம்
மெய்ப்பு பின்
பிறழ்வுகள் காணின் பின்னூட்டம் செய்யுங்கள்>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.