அனுபந்தம் என்ற சொல்லைச் சுருக்கமாக இங்கு விளக்கியுள்ளோம். அது இங்கு உள்ளது:
https://sivamaalaa.blogspot.com/2020/12/0-0.html
இனி அனுகூலம்:
அனு: அண் > அன் ; அண்> அணு; அன் > அனு என்பவும் அறிக.
அடுத்திருப்பது, அடுத்துவருவது முதலியன இதில் குறிக்கப்படுவனவாகும்.
கூ எனத் தொடக்கத்துச் சொற்கள், பெரும்பாலும் சேர்ந்து இருப்பன, திரள்வனவற்றைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டு:
கூ > கூளம்: சேர்ந்துவிட்ட குப்பை.
கூ > கூலம் சேர்ந்து குவியலாகும் தானியங்கள்.
தான் உழைத்து உண்டாக்கிய நெல் கொள் முதலியன "தானியம்" எனப்பட்டன.
தான் > தானியம்.
அதை உழைத்து உண்டாக்காதவனும் அதைப் பின் தானியம் என்றே குறித்ததனால் பொருள் விரிவுற்றது.
அனுகூலம் என்பது நன்மை குறிப்பது. கூலம் என்பது தானியமாகிய நற்பொருள் குறித்தமையின், நெல்லை அணுகி நிற்கும் நன்மைகள் என்று கருதப்பட்டவை " அனுகூலம்" ஆயின. சொற்பொருள்: அணுகிச் சேர்ந்து நன்மை விளைப்பவை என்பது பொருள்.
பக்கவலிமையாக வந்து கூடுபவை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.