Pages

திங்கள், 14 பிப்ரவரி, 2022

பாசிப்பயறு - முளை.

 

காசைச் செலவுசெய்து கார்மழையில் வண்டியேறி

ஆசைப் பயற்றுமுளை ஆம்காண ----கூசொளியில்

செம்மைச் செடிகாணும் சீர்மனைக்குள் செல்லாரே

தம்மகத்துக் காண்க தழைப்பு .


அருஞ்சொற்பொருள்:   ஆசைப் பயற்றுமுளை ஆம்   -- விரும்பும் பயற்றுமுளை ஆவதை.  இங்கு ஆவது என்றால்  முளைத்துச் செடியாய் ஆவது.   காண - ஆவதைக் காண என்று இசைக்க.  கூசு ஒளி -  ஒளி மிகும் மின் விளக்குகளால் கூசுவது.   செல்லாரே -  அங்குப் போகாதவர்கள்.  தம்மகத்து -  தம் வீட்டில்.   தழைப்பு  - செழித்து வளர்வது.  


ஒருசட்டி மண்ணில் இருசிறங்கை தூவிச்

சிறிதளவில் நீர்தன்னைச் சேர்க்க -- வருபயிரால்

பாசிப் பயற்றுமுளை பார்க்கும் பயன்பேறு

தேசத்தார் யார்க்கும் எளிது.


அருஞ்சொற்பொருள்:

இருசிறங்கை  -  இரண்டு கைம்மண்ணளவு.   வரு பயிரால் -  முளைத்து எழும் பயற்றுப் பயிரால். பயன் பேறு  --  (பார்க்கும் ) வாய்ப்பு பெறுதல்.  தேசத்தார் - பொதுமக்கள்.

[வெளியில் மழை.  ஆனால் காட்சிமனைக்குள் கண்கள் கூசும் ஒளி. பலபயிர்களையும் காசுகொடுத்துக் காணலாம்.   ஆனால் வீட்டுமுன்னே வேண்டிய செடிகளை சட்டிகளில் நட்டுவைத்தும் கண்டுமகிழலாம்.]


படம்:


இவை பாசிப்பயற்றுச் செடிகள்.


மீள்பார்வை: பின்னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.