இன்று கபாலி என்ற சொல்லைச் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.
கபாலி என்ற சொல்லின்பின் சமய வரலாறுகளும் பிறதொடர்புகளும் இருத்தல் கூடும். அவற்றைப் பற்றிப் பின்னர் "ஆர அமர"ச் சிந்திக்கலாம். ஆர - நிறைய. அமர - in a settled manner or taking time and with due attention. ஆர்தல் - நிறைதல்.
கபாலம் என்பது தலையைக் குறிக்கிறது.
மனித உடலில் கடுமை அல்லது கெட்டித் தன்மை வாய்ந்த பகுதி கபாலம். மற்ற உயிரினங்களிலும் இவ்வாறே பொருள்கொள்ளலாம். சில உயிரினங்கள், எ-டு: புழு, பூச்சி முதலியவற்றில் தலை விலங்குத் தலைபோல் கெட்டித் தன்மை இல்லாததாய் இருக்கலாம். இஃது இருக்கட்டும்.
கடுமைக் கருத்து. (கடு)
பான்மை அல்லது பகுதியாய் இருத்தல் கருத்து. (பால்)
கடு + பால் + அம்.
கடுபாலம்.
கடுபாலம் > கபாலம். ( உடலின் கடினமான பகுதி, அல்லது பல்தொடர்புகளும் உள்ள பகுதி. ) A complex organ or part of the body.
இப்போது வல்லின எழுத்துக்கள் இடைக்குறையில் மறையும் என்பது கூறினோம். பழைய இடுகைகள் காண்க.
அண்மையில் வெளியிட்ட இடுகை:
https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_9.html
உங்களுக்கு ஓர் எ-டு:
தடுத்தல் வினைச்சொல்.
தடு > தடுக்கை. (கை விகுதி பெற்ற சொல்).
தடுக்கை > ( இடைக்குறைந்து) > தக்கை.
உள்ளீட்டினை வெளிவராமல் பாதுகாப்பது "தக்கை" ( தடுக்கைதான், வேறென்ன?)
எனவே, கபாலம் என்பது உடலின் கடினமான பகுதி என்பதையே பொருளாகக் கொண்டுள்ள சொல். இலக்கணப் படி: இடைக்குறை.
கபாலம் > கபாலி : கபாலம் உடைமை அல்லது கபாலம் பயன்படுத்துநர்.
அடிச்சொல்: கள் - கடு.
கள் > காள் > காழ் > காழ்த்தல் ( கடுமை அடைதல்).
கள் > கடு > கடுமை. கடு> கடி.
கள் > கடு> கடி+ இன் + அம் > கடினம்.
காழ்+ பாலம் > காபாலம் ( முதனிலை குறுகி) > கபாலம் ( எனினுமது).
குறுகுதலுக்கு எ-டு: தாவு > தாவு+ அம் > தவம். ( இல்லற நிலையினின்று துறவுக்கு மாறுதல் என்ற கருத்து). இதற்கு வேறு திரிபு விளக்கங்களும் உள.
இவற்றினுள் பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை. எப்படிச் சொன்னாலும் மூலச்சொல் ஒன்றானால் பெரிதுபடுத்தப்பட மாட்டாது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.