Pages

வெள்ளி, 24 டிசம்பர், 2021

துர்க்கையம்மன்- தொடர்பூசை நோயகல


நின்திருமுன் வந்தேனே தாள்பணிந்தேன்

நீளுலகின் துயர்போக்கக்  கைகுவித்தேன்

மன்பதையும் நோய்த்தொற்றால் பாங்கழிந்த

மாபிணியை  மாற்றிடுவாய் வேண்டினேனே

கண்கடையால் பார்த்தெம்மைக் காக்கவென்று

கால்களிலே விண்ணப்பம் சேர்வினைதான்

தண்ணருளைப் பெறுவிக்கும் திண்ணமுற்றேன்

தாயிரங்கித் தரணிசெழிக் காதோஅம்மா. 


-- சிவமாலாவின் கவி


நின் - உன்

திருமுன் - சந்நிதி முன்பு

தாள் - பாதங்கள்

மன்பதை --   மக்கள் கூட்டம்

மாபிணி -  பெரிய நோய்

கண்கடை - கடைக்கண்

சேர்வினை -  சேர்த்த செயல்

தண்ணருள் - குளிர் ந்த  கருணை

தாய்  இரங்கி - துர்க்கையே நீ இரங்கி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.