Pages

செவ்வாய், 26 அக்டோபர், 2021

பலர் வீழ்ந்த பரிதாப நிலை.

 பிழைப்பவர் யார்யார் இனியே அறியோம்

இழப்பவர் யார்யார் உயிரை  அறியோம்

தழைக்கும் தகுதியே தாங்குவர் தழைப்பர்

நுழைக்கும் தனைநோய் நுண்மி எனப்பயம்.


நெருநல் உளனே  இன்றிலை  என்றதோர்

பெருநல  உலகில் பின்நிகழ் வறியாது

கருணைத் தெய்வம் வணங்கிக் கலங்கி

வெறுமையில் கிடக்கும் வீண்மை வாழ்வு.


முன்வந் தனர்காண் இந்நாள் கண்டிலம்

தன்வந் தரிக்கே முன்னறி   வியல்வது

இன்தமிழ்  எண்ணி வந்தனர் தமக்கே

இன்தர  விதுவே இருக்கும் வரைக்குமே.



கிருமி நாட்டில் எங்கும் பரவிவிட்டது. community infection. may surge.

நோய் நுண்மி--  கிருமி (தாக்கும்( என்று பயம்)

நெருநல் = நேற்று.

இன்றிலை -  இன்று இல்லை

பின் நிகழ் வறியாது - இனி நடப்பவை அறியாமை

கண்டிலம் = காணவில்லை

தன்வந்தரி - வைத்தியர்.

இன் தரவு - இனிய வழங்கல்

பரிந்து தவித்தல் -  மனமிரங்கித் தவித்தல்,  பரி + தாபம்.

பரி - வினைச்சொல். பரிதல்.

தவி + அம் > தாவம் > தாபம்,  இது வகர பகரப் போலி அல்லது

மாற்றீடு. தமிழே  ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.