பூந்தோட்டம் ஒன்றைப்போய்க் காணவேண்டும் --- அங்கே
பூத்துக் கமழ்மலரைச் சூடவேண்டும்;
வீட்டுக்குள் இணையத்தில் பூங்காகண்டேன் ---- இயற்கைக்
கிணையாக அதுநிற்கும் இன்பமுண்டோ?
பகலோனும் எழுங்காலை கீழ்த்திசையிலே ---- சென்று
பார்த்தின்பம் என் கண்கள் அடையவேண்டும் ;
நகர்வின்றி அறைக்குள்ளே நாட்டிக்கொண்டு ---- அவனை
நான் காணில் நயக்கும்நல் இன்பமுண்டோ?
தெப்பக்குளம் திகழும் திருத்தலத்தே----சென்று
தேர்மீது தேவன்வரப் பணியவேண்டும்;
நிற்கநடப் பதற்குமட்டும் இடமேகாணும் ---- வீட்டில்
நிழல்விரித்த கோவிலதை நிகர்த்தல் உண்டோ?
நயக்கும் - தரும்
நிழல் - கணினிக்காட்சி
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.