போக்கின் கடுமையை வென்றிட,
இதுவே செலும்வழி என்றனர் --- பிறர்
எவரும் வராநிலை கொண்டனர். (1)
பூசை நடத்தல்
சிலவரே ஆதரித் தோர்வர --- பூசை
செவ்வனே சென்றதே துர்க்கையின்,
மலரழ கேயலங் காரமே --- கண்டு
மலைத்தன நம்மனோர் உள்ளமே! (2)
அம்மனை வேண்டுதல்
நோய்வரும் வாயடைப் பாய்நலம் --- அம்மா!
நுடங்கா மலேவரச் செய்திடு!
வாய்வயி றானவை நெஞ்சுடன் --- நல்ல
வன்மை அடைந்திட நல்குவாய். (3)
பூசை முடிவு
ஆவன செய்தனர் பூசைஓர் --- மணி
அடுத்து வராமுனம் ஆனதே!
மேவு மகிழ்வொடும் வந்தவர் ---- அருள்
பெற்ற நிறைவொடும் ஏகினர். (4)
சிவமாலாவின் கவிதை.
பொருள்:
செலும் - செல்லும் (தொகுத்தல் விகாரம்)
நோய் வரும் வாய் - நோய் வரும் வழி.
நலம் - எல்லா நலமும் அல்லது பிற நன்மை யாவும்
நுடங்காமலே - உடல்நலம் கெடாமல்.
பிற நலம் வந்தாலும் உடல்நலம் கெட்டால் பயனில்லை.
வராநிலை - தடை.
வராமுனம் - வரா முன்னம். (முன்னம் - முன்பு.)
நம்மனோர் - நம் மக்கள்
அறிக மகிழ்க.
மீள்பார்வை பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.