மனம் ஒரு நிலைப்படாமல் இடர்ப்படுதலும் ச.லிப்பு என்றே சொல்லப்பெறும். இதன் அடிச்சொல் "சல்" என்பது.
சல்லுதல் - சல்லடையால் சலித்தல்
சலித்தல் - பெரிது சிறிது வேண்டியது வேண்டாதது என, சிறு துளைகள் உள்ள ஏனத்தால் பிரித்தெடுத்துத் தூய்மை செய்தல். துளைப்பாத்திரத்தால் கூலங்களைச் சரிசெய்து மேற்கொள்ளுதல். ஏற்ற துணித்துளைகளாலும் சலிக்கலாம்.
சல் - சலிப்பு: கோபம். மனநிறைவின்மை.
சலிப்புப் பண்ணுதல் - தொந்தரவு பண்ணுதல்.
கூலத்தைத் துளை ஏனத்தில் அலைத்தெடுப்பதுபோல எண்ணங்கள் நிலையின்றி இருத்தல் .
அலை என்பதன் அடிச்சொல் அல். அகரத் தொடக்கமும் வருக்கமும் சகரத் தொடக்க வருக்கங்களாகும்.
அல் > சல்> சலி > சலித்தல்.
இதுவுமது: அமண் - சமண். பிற மற்ற இடுகைகளில் அறிக.
கவனிக்க:
அல் > அலை
அல் > அலம்பு.
அல் > அலட்டு
இவை ஆடுதல், அசைத்தல், முதலிய தொடர்புகளை உடையன. அல்.- இதுவே சல் என்ற சொல்லிலும் உள்ளது. இவ் வசைவுச் சொற்கள் அவற்றிற்கு ஒப்பான மனச்செயல்களைக் குறிப்பனவாயின. இஃது ஒப்புமையாக்கம்.
சல் > சலனம் என்பதும் இத்தொடர்பில் விளைந்ததே. ( சல்+ அன் +அம்);
இனிச் சஞ்சலம் என்பது:
தம் + சலி + அம் = சம் + சலி + அம் > சஞ்சலம். லி e
ன்பதன் இகரம் கெடுதல்.
தம் > சம் ( த - ச திரிபு)
சலி + அம் > சலம்
தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை குறிப்பது. சம் என்பதும் அது.
மனிதன், மனம் ஆகிய இரண்டும் சேரப் பன்மை ஏற்படும். ஆகவே சஞ்சலம்
என்பதில் இவ்விரண்டும் தொடர்பு அறுந்த அசைவு காணப்பெறும்.. ஒருங்கியலாமை.
அறிக. மகிழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.