இன்று ஆமணத்தி என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.
ஆமணத்தி என்பது கோ உறு ஓச்சனை அல்லது கோரோசனை என்னும் வாசனைப் பொருள். ஓச்சுதலாவது, வீசுவது அல்லது பிறர் பட்டுமோக்கும்படி எறிவது. மோ> மோத்தல். மோக்கும் - மோந்தறியும்.
ஓச்சுதல் : ஓச்சு+ அன் + ஐ > ஓச்சனை> ஓசனை..
ஆவிலிருந்து வருவதும் மணத்தை உடையதுமான ஒரு பொருளே ஆ+ மணம்+ அத்து + இ = ஆமணத்தி: அதாவது ஆவின் மணப்பொருள்.
கோரோசனை என்பதில் கோ உறு ஓசனை > ( இதில் ) று + ஓ > றோ > ரோ என்று திரிந்துவிட்டது.
ஆமணத்தி, கோரோசனை என்பவை ஒருபொருளன.
சித்த வைத்தியத்தில் கோரோசனையிலிருந்து மாத்திரை அல்லது மருந்து செய்வர். இதைச் சித்த வைத்தியர்பால் அறிக. இதை இங்கு விரித்து வரிக்கவில்லை (வி-வரிக்கவில்லை).
கோ = ஆ. ( பசுமாடு).
உறு - தோன்று(ம்). உண்டாகும்..
அறிக மகிழ்க.
மெய்ப்பு - பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.