வாய் என்ற தமிழ்ச்சொல் பல மொழிகளில் பரவியுள்ளது. ஆனால் ஒவ்வொரு மொழிக்குள்ளும் அது புகும்போது, சற்று மாறுதலுறும். மாறுதல் இல்லாமல் புகுதல் அரிது. எடுத்துக்காட்டாக இங்கு என்ற சொல்லைச் சீன மொழிக்கு அனுப்பி வைத்தீர்கள் என்றால் அது இங்கு என்ற வடிவத்திலிருந்து சீனமக்கள் ஒலித்தற்கியலும் வழியில் எளிமையாக்கப் படவேண்டும். அம்மொழிக்கு ஏற்ப அது " இங்" ஆகிவிடும். சீனமொழியில் முன்னரே இங் என்றொரு சொல் இருப்பதால், மேலும் திரிபுறக்கூடும். அல்லது தள்ளுபடியாக்கப் படுதலும் கூடும். திரிபின்றி ஏற்கப்படுதலும் கூடும்.
Subcuntaneous என்ற ஆங்கிலச் சொல் இன்னொரு ஐரோப்பிய மொழியில் sous cutanee என்று மாறிவிடுகிறது.மொழிக்கு மொழி மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது ஆகும்.
இவைபோலவே வாய் (பொருள்: வாய் என்னும் உறுப்பு, மற்றும் வழி) என்பது வய via என்று இலத்தீனில் மாறுகிறது./ வாய் - வழியென்பது வாய்ப்பு என்ற பொருளிலும் வழங்கும் "ஓல்லும்வா யெல்லாம் செயல்"(பொருள்: இடம்) ( (குறள்) என்பது காண்க.
உருவமில்லாத வாய்:
உலகத்தில் யாம் சொல்லப்போகும் வாய் இரண்டு. ஒன்று முடிந்த வாய். இன்னொன்று முடியாத வாய். அதாவது ஒல்லும் வாய், ஒல்லாத வாய். ஒல்லுதல் என்பது வள்ளுவனார் பயன்படுத்திய சொல்.
ஏதேனும் ஒரு திட்டத்தில் முடிந்த வழி முடியாத வழி இருக்கலாம். இந்த வாய் உருவமில்லாத வாய் அல்லது இடம். இதனைத்தான் வாய்ப்பு என்று சொல்கிறோம்.
வாய் என்ற உறுப்பினின்று வருவது:
வாய் > வாய் இ > வாயி+த்தல் > வாசித்தல். பொருள்: வாயிலிருந்து
வெளிப்படுத்துதல்.
வாய்நீர் - உமிழ்நீர். பேச்சில் இது வானி, வாணி என்று இடைக்குறைந்து
வழங்கும்.
வாய்மலர்தல் - (பெரியோர்) சொல்லுதல்.
வாய்வது - உண்மை.
வாய்மை - உண்மை.
வாய்வாளாமை - மவுனம். பேசாமை.
வாயுறை - உறுதிமொழி மற்றும்....
வாசி+ அகம் (விகுதி) > வாசகம். ( திருவாசகம்).
வாத்தியார்: வாய்ப்பாடம் சொல்பவர். ( உபாத்தியாயி வேறு) உப அத்தியாயி.
வாய் > வாய்த்தியார் > வாத்தியார். யகர ஒற்று இடைக்குறை.
வாய்+ உ = வாயு.. வாயிலிருந்து ,முன்வருங்காற்று. பொதுவாகக் காற்று.
ஓர் இடத்திலிருந்து வெளிப்படும் காற்று என்பதுமாம். உ - முன். சுட்டுச்சொல்
வாய் - நீட்சிக்கருத்து.
கால்வாய்.
வாய்க்கால்
வீட்டின் பகுதி
வாய் > வாயில் > வாசல்.
இடமிருப்பது
வாய் > வயம். ஒருவனிடம் இருப்பது.
இடத்தில் கிடத்துவது:
வாய் > வய் > வை.
இவற்றைக் காண்க: பை > பய் > பயல். பை > பையன்.
பை > boy எப்படி? ஆய்வு செய்க.
இவற்றில் சில, --- அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அறிந்து மகிழ்க.
இன்னும் பல. பின் காண்போம்.
தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம்.
இதில் ஓரிடத்தில் " இதனைத்தான்" என்பது
" இதனைததான" என்று மாறிவிட்டிருந்தது. கண்டுபிடித்து
த என்பதற்கு த் என்று ஒரு புள்ளிவைக்க உடனே
"ன " என்பது "ன்" என்று தானே மாறிவிட்டது..
இவற்றின் தொடர்பு புரியவில்லை. மென்பொருள்
வல்லுநராயின் அன்புகூர்ந்து ஏன் என்பதைத் தெரி-
விக்கவும். 5.51 21.5.2020 சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.