ஆட்டாமாவு என்ற பதத்தினை அறிவோம்.
ஒலியில் எந்தப் பொருளும் இல்லை. ஒலி அல்லது ஒலிகள் இணைந்த சொல்லுக்குப் பேசுவோர்தாம் பொருளைத் தருகின்றனர். மா என்ற சொல்லுக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒரு பொருளிருக்கலாம். சில வேளைகளில் ஒரே பொருளில் இருவேறு மொழிகளில் சொல்லிருக்கலாம். எடுத்துக்காட்டு மா என்பது. தமிழில் மா என்ற பல்பொருளொரு சொல்லுக்கு குதிரையென்பதும் ஒரு பொருள். அதே சொல் சீன மொழியிலும் அதே பொருளில் உள்ளது. இஃதொரு தொடர்பற்ற உடனிகழ்வாகவும் இருக்கலாம். அல்லது இருவேறு மொழிகளுக்கிடையில் முன் தொடர்பு இருந்திருமிருக்கலாம். யாது என்று ஆய்ந்தாலே புலப்படும். நீ என்ற சொல்லும் அன்னது. மொழியைப் பேசுவோர் என்போர் பண்டுதொட்டு இன்றுகாறும் அதனைப் பேசிவரும் வரலாறு உடையோர்.
இனி மாவுக்கு வருவோம். மாவு என்பது அரிசி முதலானவற்றை ஆட்டுக்கல்லில் இட்டு ஆட்டி அரைத்து எடுக்கப்படுவது. இப்போது மின் அரைப்பான் உள்ளது. எங்கள் வீட்டில் இன்னும் ஓர் ஆட்டுக்கல் பயன்பாடு இன்றி உள்ளது.
ஆனால் உமியிட்டு அரைத்த கோதுமை மாவினைத் தமிழர்கள் அறிந்தபோது அல்லது அவர்களிடம் அது கொணரப்பட்ட போது, அது முன்னரே அரைக்கப்பட்டு இருந்ததால் அதை ஆட்டுக்கல்லிலில் இட்டு ஆட்டவேண்டியதில்லையாயிற்று. ஆட்டிய தோசை அல்லது இட்டிலி மாவு வேறிருக்க, இதனைத் - திறமையுடன் - ஆட்டாத மாவு என்றனர் தமிழர்.
இதுவே அந்த மாவிற்கு இன்று நிலைத்த பெயராயிற்று. ஆட்டா என்ற எதிர்மறைப் பெயரெச்சம் தனிச்சொல் ஆகிவிட்டது. "யாவர்க்கும்" என்ற பொருள்படும் இலத்தீன் சொல் : "omnibus", இன்று பஸ் என்று குறுகிப் பேருந்து என்னும் வண்டியைக் குறிக்கவில்லையா? சொல் நூலில் இவ்வாறு வருவது ஒன்றும் புதுமையன்று. கல் குலுக்கு என்ற வாக்கியத் தமிழ், இன்று ஒரு கணிதக்கலைச் சொல்லாகி "கல்குலஸ்" என்ற வடிவம் பெறுகிறது. மொழிகளில் சொற்கள் திரிந்தன -- பலவாறு.
சமத்கிருதத்தில் ஆட்டா/ அட்டா என்பது சோற்றைக் குறிக்கும். மாவைக் குறிக்கவில்லை. அடுதல் - சமைத்தல். அடு+ ஆ = அட்டா> ஆட்டா. அடு+பு > அடுப்பு. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது என்ற பழம்பாடல் காண்க.
அட்டா என்பதில் ஆ தொழிற்பெயர் விகுதி. நில் > நிலா எனல்போல். இச்சொல் மாவின் பெயரன்று.
மறுபார்வை பின்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.