பிரார்த்தித்தல் என்பதை அறிவோம்.
பண்டை நாட்களில் இறைதொழும் நடவடிக்கைகள் வீட்டுக்கு வெளியில்தான் பெரிதும் நடைபெற்றன. இதற்குக் காரணம் வெளியிடத்துள்ள lஇடவிரிவு ஆகும். ஆலமர் கடவுளும் (சிவன்) அங்குதான் வைத்துப் பூசனை பெற்றார். ஆலமரம் என்பது அகல மரம். அகல் அகலம். அகல் ஆல். இது பகல் பால் என்றசொல் போலுமொரு திரிபு. பகல் எனிற் பிரிவு. பகு அல் > பகல். அறத்துப்பால் என்றால் அறத்தைப் பற்றிக் கூறும் பிரிவு. மற்றும் சூரியன் ஒளிரும் பகுதி நேரமும் பகல் எனவேபடும்.
சூடியன் > சூரியன். இது மடி > மரி போலும் திரிபு.
வீட்டுக்குள் தொழும் முறை இடவசதிக் குறைவின் காரணமாய் அப்போது பெரிதும் ஏற்படவில்லை.
மக்கள் ஆலமரத்தடி சென்று பிரார்த்தித்தனர். பிரார்த்தித்தலாவது புறத்தே ( வீட்டுக்கு வெளியில் ) சென்று தொழுகை மேற்கொள்ளுதல். வேண்டிக்கொள்ளுதல். அரண்மனைகளில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை வேறாகும்.
இதில் உள்ள சொற்கள்:
புறம் .> புற. ( வெளியில். )
ஆர்த்தல் : ஒலித்தல். இச்சொல் ஏனைத் தமிழின் இனமொழிகளிலும் உளது.
ஆர்த்தல் என்பது பின் சொல்லமைவின் பொருட்டு ஆர்த்தித்தல் என்று திரிந்தது. ஆர்த்தித்தல் என்பது ஒலிக்கச் செய்தல்.
புற ஆர்த்தித்தல் > பிர ஆர்த்தித்தல் > பிரார்த்தித்தல்.
வெளியில் நின்று தொழுகை மேற்கொள்ளுதல். தொழுமனைகள் அல்லது கோயில்கள் அமைந்தபின் அங்கு தொழுதல், வீட்டில் வசதி கிட்டியபின் அங்கு தொழுதல் என்று பின் பிரார்த்தனை பொருத்தமான எவ்விடத்தும் செய்யப்படுவதாயிற்று.. சிற்பிகள் தோன்றிச் சிலைகள் வடித்த பிற்காலத்தில் அவற்றின்முன் நின்று ஒலி எழுப்பி வேண்டிக்கொள்ளுதல் பிரார்த்தனையே ஆயிற்று.
ஆர்த்து ஆர்த்து ஓங்கி: திருவாசகம் 3.51
அர், ஆர் என்பன ஒலித்தல் குறிக்கும் தமிழ் அடிச்சொற்கள். வல்லமையுடன் ஒலிஎழுப்பிப் பிறரை அடக்கிக் கீழ்ப்படியச் செய்து இயக்கியவனே அரசன். அர் . > அர > அரசு. ( பரி > பரிசு: சு தொழிற்பெயர் விகுதி ). அர் > அரற்று > அரற்றுதல்: ஒலித்தல். அர் > அரட்டு.
கடல் ஆர்த்து எழுந்து சுனாமி வருகின்றது. " ஆர்த்தெழுவோம் நாம் தமிழரென்று " என்ற வாக்கியத்தில் ஒலித்தெழுவோம் என்று பொருள். அர அர அர சிவா என்பது பின் ஹர ஹர சிவ என்று அயலில் மெருகுண்டு திரிந்தது. அரட்டு > அதட்டு என்றும் திரியும். "த த வாடா" என்பதில் த என்பது அதட்டுதல் குறிப்பு. அர அர என்பது ரா ரா என்றும் திரியும். ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் அரசு என்பதன் திரிபு. இப்போது உலக சேவைச் சொல் அதுவாகும்.,.
அர ஹர சிவ சிவ குருநாதா
அருகினில் வந்தெமைக் காவாவா ( பாட்டு. )
அர்ச்சனை அருச்சனை என்ற இவற்றை ஆய்வு செய்யுங்கள்.
மறுபார்வை பின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.