எலிதரு புத்தாண் டியற்றிற்று யாதோ
நலிதரு கொள்ளைமுன் நாளில் ------ பலியுறு
மூச்சுத் திணறுசளி மூண்டதுவே இந்நாளில்
பேச்சிலுமே அச்சம் தரும்.
எலிதரு புத்தாண்டு - சீனப் புத்தாண்டு எலியாண்டு.
இயற்றிற்று யாதோ - முடித்தது எதுவோ? ( தந்த பலன் என்ன?)
நலிதரு கொள்ளை = கொள்ளை நோய்.( நலி - நோய்.) நலிவு.
பலியுறு - உயிர்ப்பலி மிகுந்த.
மூச்சுத் திணறுசளி - நிமோனியா.
மூண்டதுவே - தொடங்கியதே.
பேச்சிலுமே - அதைப் பேசினாலும்.
விய என்பதினின்று வரும் சொல் வியாதி. விய + ஆ ( ஆதல் ) + தி (விகுதி).
வியாதி என்பது பரவுகிற நோய் அல்லது தொற்று. நாளடைவில் அது
தன் நுண்பொருள் இழந்தது, பொதுவாக நோய் என்ற பொருள்பெற்றது.
விர் > விரி. விர் > விய்- விய. வியன் உலகு - விரிந்த உலகம்..
இந்த எலியாண்டில் நிமோனியா வந்துள்ளது. முன்னாளில் எலிகடிக் கொள்ளை நோய் எலியாண்டில் வந்ததோ? (தெரியவில்லை). இது எலியாண்டின் பலனோ? எ-று.
மறுபார்வை: தட்டச்சுப் பிறழ்வுகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.