Pages

திங்கள், 13 ஜனவரி, 2020

கொடூரமும் நெட்டூரமும்.[ நிஷ்டூரமும்]

ஊறு என்றால் துன்பமென்று பொருள். கெடுதல் என்றும் பொருளுரைக்கலாம். இச்சொல் உறு என்பதிலிருந்து வருகிறது.

படு (படுதல்) என்பது  பாடு என்று முதனிலை திரிந்து பெயர்ச்சொல் ஆகிறது. முதனிலை என்றது முதலில் நிற்கும் ப என்ற எழுத்தை.  அது "பா" என்று நீண்டுவிட்டதன்றோ?  நீள்தல் (  நீடல் )  திரிபு வகைளில் ஒன்று.

இவ்வாறே  உறு  ( உறுதல் )  பெயராவதற்கு ஊறு என்று மாறியுள்ளது.   ஊறுதல் என்ற வினைச்சொல் வேறு.  எடுத்துக்காட்டு: நீர் ஊறுதல்.

கொடுமை என்பது மனிதனோ அன்றி விலங்குகளோ ஏனை உயிரினமோ "உறுவது". இவ்வாறு சொன்னால், பின் ஊறு என்பது ஏன் அம் விகுதிபெற்று ஊறம் என்றாகி, மேலும் திரிந்து ஊரம் என்று ஆகி, கொடுமை உறுவது என்ற பொருளில் கொடூரம் என்று  அமைந்திருத்தல் இயலாது என்ற எண்ணம் தோன்றலாம்.  அவ்வாறாயின்,  ஊறு என்பது அம் விகுதி பெற்றதும் அதன்பின் கொடு என்ற கொடுமை குறிக்கும் சொல்லுடன் இணைந்ததும் ஆகிய செயல்களால் ஆனதோர் பயன் ஒன்றுமில்லை என்று அறிக.  மேலும் கொடுமை என்பதும் துன்பம்; ஊறு என்பதும் துன்பம்,  ஆதலின் பயனொன்றும் இல்லை (mImisaich chol -  மீமிசைச்சொல்) என்பதுடன், அம் விகுதியினாலும் ஒன்றும் கூடுதல் கிட்டவில்லை என்பதும் அறிக.  சிலவிடத்து வெற்று விகுதிகள் இணைப்பும் மொழியிற் காணப்படுமெனினும் இங்ஙனம் அருகியே நடைபெறுதல் நன்று என்பத     ு அறிக.

ஊர்தல் என்பது நெருங்கிவருதல் , நாமறியாமலே மெல்ல வந்து சேர்தல்  என்ற பொருளில்,  கொடு+ ஊர் + அம் = ுஉரம்   ொூரம்
என்ற சொற்புனைவு உண்டாயிற்று  என்பதே பொருந்துவதாகும்.

ஆகவே கொடூரமாவது எதிர்பாராமல் வந்துற்ற மிகுதுன்பம் ஆகும். இது சொல்மைப்பாலும் வழக்காற்றாலும் பெறப்படும் பொருளென்று உணர்க.

நெடிதும் உறும் பெருந்துன்பமே நெட்டூரம் ஆகும்.  இச்சொல் ஒழிய, இதுவே நிஷ்டூரம் என்று மாற்றுரு அடைந்து உலவலாயிற்று என்றறிதல் தடையற்ற சிந்தனையாகுமென்பது அறிக.

அரிதல் என்பது மிகமிகச் சிறிதாக,     அளவிலும் சற்றுக் கூடுதலாக வெட்டுதல் ஆகும்.  அப்படி அரியப் பயன்படும் கத்தி ஆரி ஆகும்.  இதுவும் முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  தொழிலுக்குப் பெயரானது பின்னர் அத்தொழிற்குப் பயனாகும் கத்திவகைக்குப் பயன்படுவதனால் அஃது ஆகுபெயராய் ஒரு கருவியைக் குறித்தது.  சற்று நெடிதான " நெட்டாரி" காணப்படுவதில்லை.  நெடிதானவை அரிதற்குப் பயன்படுவதில்லை போலும்.
இந்த "ஆரி"  கட்டையாக,  (  நீளம் குறைவாக )  இருந்ததால், கட்டை+ ஆரி = கட்டாரி ஆயிற்று.  கட்டை என்பது குட்டை.  குட்டையான பை குட்டான் எனப்படுகிறது. (வெற்றிலைக் குட்டான்).   குட்டையானவர்  "குட்டார்" என்றும் அழைக்கடுவது காண்க.  எ-டு:   குட்டார்க் கங்காணி. (குட்டார் என்பது வழக்கிலிருந்து யாம் அறிந்தது.  அகரவரசையில் தேடிப்பார்க்கவும் ).  சிலவிடத்துக் கட்டாரி என்பது இயற்பெயராகவும் உள்ளது. ஆட்பெயராகும்போது  இங்கு வரும் ஆரி என்பது, ஆர்  = மரியாதைக்குரிய ,  இ  - மனிதரைக் குறிந்த வந்த விகுதி.  (  ந(ண்)பர் ).   அரியும்  குட்டை வாளானது சிறவாமையின்.  கட்டாரி என்பது குத்துவதில் திறனுடைய மனிதர் என்று ஒப்புமை கூறுவதாயினும் அதுவும் கொள்ளாமென்று ஏற்பதில் எமக்கொரு மறுப்பும் இலது காண்க.

கொடூரம் என்பது கடூரம் என்றுமாகும். பின்னுமது  குடோரமென்றும் உருமாறும்.

குட்டன் என்பது மகனையும் குறிக்கும்.   அப்புக் குட்டன் -  அப்புவாகிய குட்டன்; அப்புவின் மகன் எனலுமாம்.

குட்டாரம், குட்டரி என்பன (  சிறிய ) மலை குறிப்பவை.  இங்கு வந்த ஆரம் அரி என்பவை வெட்டுதல் குறிப்பவை அல்ல.   அரு+ அம் = ஆரம்,  அருகிலிருப்பது (குன்று).   அரு+ இ = அருகிலிருப்பது.  குட்டை ( குட்டையானது) என்பதும் குன்று  ( குன்றுதல் ) என்பதும் சிறுமை குறித்து ஒரு பொருளனவாயின.

This post has been hacked. It
defies edits. Re-edit is postponed.
Pl read with care.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.