Pages

சனி, 11 ஜனவரி, 2020

பீச்சக்கை

இன்று "பீச்சக்கை" என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல் ஒரு கூட்டுச்சொல் ஆகும். இதைப் பிரித்தால் இரு சொற்கள் தென்படுகின்றன. அவையாவன:

பீச்சு + கை

பீச்சுதல் என்பது பேதியாகுதல், மலம் கழிதல் என்பதை இங்குக்  குறிக்கிறது. இந்தச் சொல் (பீச்சுதல் ) இப்போது இந்தப் பொருளில் பேச்சு வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணக்கிடைப்பது ஆகும். பீச்சுதல் என்பதன் வேறு பொருள்களை இங்கு நாம் ஆய்வு செய்யவில்லை. இஃது "பல்பொருளொரு சொல்.    " (ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுடையது)”

பீச்சு+ கை என்பது பீச்சக்கை என்றும் பீச்சங்கை என்ற  அம்  என்னும் சொல்லாக்க இடைநிலை பெற்றும் வழங்கும். ஆறு + கரை > ஆற்றங்கரை என்பதில் அம் என்னும் சாரியை வருவது போன்றது இதுவாகும். வேம்பு + குச்சி = பேப்பங்குச்சி என்பதில் அம் இடையில் வருவதும் அது.

கழிவைக் கழுவுதற்குப் பயன்படும் கை என்பது இக்கூட்டுச் சொல்லின் பொருளாகிறது. இது பேச்சுவழக்கில் மட்டும் உள்ளதாகும். பீச்சு என்பது முதனிலைத் தொழிற்பெயராய்க் கை என்னும் சினைப்பெயருடன் ( உறுப்பின் பெயருடன் ) இணைந்தது.

இக்கூட்டினை, “ பீ + சக்கை " என்று பிரிக்கவில்லை அஃது பொருந்தாமையின்.

பீச்சக்கை என்பது இடக்கரடக்கல்.

This has been hacked by intruders and has been
rectified to some extent. Please read with care.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.