வாழ், வாழ்வு என்ற சொல்லுடன் விவோஸ் (வைவோஸ்) என்ற இலத்தீன் மொழிச்சொல்லுக்கு உள்ள தொடர்பு முன்பு ஈங்கு விளக்கப்பட்டது உண்டு.
இலத்தீனில் பல தமிழ்ச் சொற்கள் உள. எவ்வாறு தமிழ் இலத்தீனில் புகுந்தது என்பதை ஆய்வாளர்கள் கூறக்கேட்டுணர்க.
அதுபற்றியும் முன் யாம் எழுதியதுண்டு.
இப்போது இன்னொரு சொல்லை அறிந்துகொள்வோம்.
விழி என்ற சொல்லும் விஸுஸ் என்று இலத்தீனில் வரும்.
பாழை என்பது பாடை என்றும் திரிதற்கொப்ப விஸுஸ் என்பது விடரே என்றும் திரியும். இதிலிருந்துதான் விடியோ என்ற சொல் ( காணொளியைக் குறிப்பது) வந்துள்ளது. ஆதலால் தமிழ் "விழி" (காண் - காணுதல்) என்பதே வீடியோ என்ற புதுமைப்பொருளுக்குப் பெயரிட வழி செய்துள்ளது என்பதை அறிதலும் மகிழ்வுறுத்துவதே ஆகும்.
வாய் என்ற தமிழ்ச்சொல் வழி என்றும் பொருள்தரும். இது "வயா" என்று இலத்தீனில் புகுந்து பொருள்மாறாது அந்த வழியையே குறிக்கும்.
வேளாண்மை விளைச்சலில் தொடர்புடையோரே காராளர். காக்கும்கை காராளர் கை என்று ஒரு பழைய வெண்பா முடியும். இந்தக் கரு (கார்) என்ற பகுதி கிரிஷி என்ற சொல்லினுள் உள்ளது. திடல் என்றோ வயல் என்றோ பொருளறியப்படும் எகர் என்பதிலிருந்து "ஆக்ரிகல்சர்" என்ற சொல் பிறந்ததாய்க் கொள்ளப்படினும் ஆக்ரி (agri) என்பதில் ஆ என்பதை விலக்க, மீதமுள்ள கிரி (-gri) என்பது கிரிஷி என்ற சொல்லில் இருப்பது காணலாம். தமிழிலும் ஆ- என்பது ஆகாயம் என்பதில் முன்னொட்டாய் ( prefix )உள்ளது. மூலச்சொல் காயம் என்பதே. சூரியன் நிலவு முதலிய காயும் இடம். ஆ என்ற முன்னொட்டு ஆதல் குறிப்பது. ஆ என்பது வினைத்தொகையிலும் வரும். எடுத்துக்காட்டு: ஆபயன். ( பயனுடையது ஆவது). ( ஆ என்பதை மாடு என்று பொருள்கொண்டு, ஆபயன் எனில் பால், தயிர் வெண்ணெய் என்று கொண்டாரும் உளர்.
ஆகிரி(agri) என்பதில் ஆ முன்னொட்டு என, கிரி என்பது வேளாண்மைப் பொருளதாகிறது.
அறிவீர் மகிழ்வீர்.
எழுத்துப்பிழைகள் பின் திருத்தம்பெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.