நாகர் என்று இன்று குறிப்பிடப் படுவோர் யாரென்று நாம் அறிந்துள்ளோமா
என்று திட்டவட்டமாய்க் கூறுவதற்கில்லை.
இற்றைக்கு நாகாலந்து என்னும் மாநிலத்தில் உள்ளோரே நாகர்கள் என்று கூறுதல் ஒரு நல்ல பதில்தான்.
ஆனால் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் இவர்கள் கடலில் இருந்த ஒரு மலையில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கிறார்.
இம்மலை நாகாலாந்திலுள்ள மலையாகத் தெரியவில்லை. ஆகவே அந்த நாகரும் இந்த நாகாலாந்து நாகரும் ஓரே வகை என்று கூறுவதற்கில்லை. சிலர் நக்கசாரணர் நாகருள் ஓர் உட்பிரிவினர் என்பர். இதிலும் தெளிவில்லை.
நக்கசாரணர் நாகர் எனல் உம்மைத் தொகையாகவும் இருக்கலாம்.
நக்கசாரணர் என்பதற்கு எம் விளக்கம் இது. வாசித்துக்கொள்ளுங்கள்.
இவர்கள் உடலில் நல்ல நிறமுடையோராய் இருந்தனர். ஆதலால் " நக்க சாரணர் " எனப்பட்டனர். நகுதல் : ஒளி வீசுதல். Gregarious people with good skin colour என்பதே நக்க சாரணர் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு. ஒளிவீசும் நட்சத்திரங்கள் உண்மையில் நக்கத்திரங்களே. இருளில் நகுவன அவை. புகு > புக்க; நகு > நக்க; தகு > தக்க; பகு > பக்க.
22.5.2019. இடுகை.
இனி நாகர் என்ற சொல்லைப் பார்ப்போம்:
நகுதல்: ஓளிவீசுதல்.
நகு+ அர் = நாகர். ஒளி வீசும் நிறத்தினர்.
இது முதனிலை நீண்டு பெயரானது.
நகு > நக்க. பெயரெச்சம். ( ஒளிவீசுகின்ற )
நக்கசாரணர்.
இவற்றை அடுத்து வேறு கோணத்தில் பார்ப்போம். மீ ண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.