இந்த இரு மலர்கள் பற்றிச் சிந்திப்போம்.
தாமரை என்பது தாழ (கீழே) உள்ளதை மருவி நிற்கும் மலர் என்று பொருள்படும்.
தாழ இருப்பது தண்ணீர்.
இதன் அமைப்பு:
தாழ் + மரு + ஐ > தா + மரு + ஐ = தாமரை.
இதுபோல் ழகர ஒற்று இழந்த வேறு சில:
தாவணி ( தா + அணி ) தாழ் > தா. கடைக்குறை.
தாக்கோல். 1
இனி அல்லி என்பது தண்ணீரை விட்டுவிட்ட சொல். அல் என்பது இரவு.
இரவில் மலர்வது என்ற பொருளில் "அல்லி" எனப்பட்டது.2
அடிக்குறிப்புகள்:
1. நாதாங்கி. - கதவும் கதவுச் சட்டமும் ஆகிய முழு அமைப்பில் ஒன்றிலிருந்து நாக்கைப் போல் ஓரத்தில் நீட்டப்பெற்று மற்றொன்றில் சென்று பற்றி அமர்வது. நாவும் அதன் தாங்கியும்.
2 இரவி என்ற சொல்லும் இரவு இருள் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே. இர் = இருள். இரவு. என்பவற்றின் அடிச்சொல். அவித்தலாவது விலக்குதல். இது சூரியனைக் குறித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.