மாணுதல் எனின் அது சிறத்தல்.
மாண் > மாண்பு: பு தொழிற்பெயர் விகுதி,
மாண் > மாணவர், மாணவி. அ+அர். அ+வி. ஆண்பால் பெண்பால் விகுதி
மாண் + ஆக்கு+ அர் = மாணாக்கர்; ~+ ஆக்கு+ இ = மாணாக்கி. சிறப்பு ஆக்கிய ஆண் பயில்வாளன்; பெண் பயில்வாளி. பயில்வு+ ஆளன், ~ஆளி.
( பயில்வான்: குத்துச்சண்டை முதலிய பயின்றவன்).
மாண் > மாணி . பிறப்பிக்கும் உறுப்பு. பிறப்பிக்கும் சிறப்புக் குரியது என்பது பொருள். மணமிலி.
மாண் .> மாணார். சிறப்பிலாதார். பகைவருக்குச் சிறப்பில்லை என்பதால் பகைவர் என்பதும் தரவுப்பொருள். அதாவது பகைவர் எவ்வாறு உயர்ந்திருப்பினும் அவரை அழைத்து நாம் சிறப்புச் செய்வதில்லை.( அதனால்).
மாணவகம் - மாண்பு மிக்கதான கல்வி. இதை ஆகுபெயராய்க் கல்விச்சாலைக்கும் பயன்படுத்தலாம்.
மாண் > மாணம்: மாட்சிமை.
மாண் > மாணல் - சிறத்தல்.
மாண் + து : மாண்டு. ஓர் இராகம். சிறந்த இராகம்.
மாண் + சி = மாட்சி. ( ஒப்புமை: காண் + சி: காட்சி).
மாண்டோர்: மாண்பு பெற்றோர்; மாண்+ து + ஓர்: மாண்டோர்.
மாண் > மாணிக்கம்; சிறந்த ஒளிக்கல்.
மாணவ்வியம் : சிறப்புக்குரிய சிறுவர் கூட்டம். மாண் + அவ் இயம். வகர உடம்படு மெய்.
கோணல்மாணல் : கோணல்கள் பல கொண்டு அதனால் தனித்து எண்ணப்படுவது. அதன் காரணமாகச் சிறப்புற்றது. இது ஒரு வஞ்சப் புகழ்ச்சிச் சொற்றொடர்.
ஆக இனி பரிந்து மாணுதல் என்று பொருள்படும் பரிமாணத்தைக் காண்போம்.
ஒன்று தன்வழியே ( பிற கலவை இன்றி) மிகுந்து சிறத்தலே பரிமாணம்.
தொடக்கத்தில் உரைத்ததும் கவனிக்க.
பரி என்பதொரு முன்னொட்டு. இதைப் பிற மொழிகளும் அணைத்தன.
எ-டு: பரி வாரம்: பரிந்து உடன்வருவோர். அன்புகொண்டு கூட வருவோர்.
வரு + அம் = வாரம்: வருதலைப் புரிவோர். முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
தட்டச்சுப்பிழைகள் பின் பார்க்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.