துலகு என்ற சொல்லில் இறுதிக் குகரம் வினையாக்க விகுதி. துல என்பதே அடியாகும்.
துலகு என்பதிலிருந்து துலங்கு என்பது அமைந்தது. அவள் கைபட்டால் எல்லாம் துலங்கும் என்று வரும் வாக்கியத்தைக் கவனிக்கவேண்டும்.
துலகு என்பதிலிருந்தே திலகு > திலகம் என்ற சொற்கள் அமைந்தன. துலங்குவதற்குத் திலகம் அணிதல் வேண்டுமென்பது தமிழர் பண்பாட்டு நம்பிக்கை. திலகம் என்பதற்கு மற்றொரு சொல்: பொட்டு என்பது.
இதில் நீங்கள் குறித்துக்கொள்வது து > தி திரிபு. இது உகர இகரப் பரிமாற்றத் திரிபின்பாற் படுவதே.
இனித் "திராவிடர்கள்" ' 'திராவிடம்" என்ற சொற்களைக் கவனிப்போம். இவை பலராலும் பலவாறு மூலம் காண முனையப்பட்டவை . திராவிடம் சங்க நூல்களில் இல்லாத சொல். ஆனால் வழக்கில் இருந்திருக்கக் கூடும். வழக்கின் அனைத்தையும் சங்க நூல்கள் கொண்டிருக்கவில்லை. இப்போது இது சங்கத நூல்களிலிருந்து கிட்டுகின்றது.
ஒரு காலத்தில் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் துணைக்கண்ட முழுமையும் பரவி இருந்தனர். கதை என்னவென்றால் பின்னர் அவர்கள் தென்னாட்டுக்குப் புலம் பெயர்ந்து அங்கேயே தங்கிவிட்டனர். தென்னாட்டிற்குத் துரத்தப்பட்டனர் என்பது பல கதைகளில் ஒன்று.
துர > திர > திரவிடன் ( துரத்தப்பட்ட இடத்தில் இருப்போன்)
ஈங்கு து என்பது தி என்றானது ஏற்கத்தக்கதே. ஆனால் திராவிடன் என்ற சொல்லுக்கு இதுதான் சொல்லமைப்பா என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
சில அறிஞர் பெருமக்கள் வேறு வரலாறு கூறுவர். முப்புறமும் கடல்சூழ்ந்த நிலத்திக்குச் சொந்தக்காரர்கள் எனவே
திரி : மூன்று.
விடு: விடர். ( இடர்: இடத்தினர்; விடர்: வகர உடம்படுமெய்த் திரிபு. அல்லது விடப்பட்டோர்.)
திரி என்பதி திர > திரா என்று திரிந்தது என்ப.
சரிதான்.
விடம்/ இடம் என்பது கடலைக் குறிக்கவேண்டும்; குறிக்கவில்லை.
இதைவிட, திரை> திர > திரவிடர்: பொருள்: கடல் இடம்பெற்ற நாட்டினர். இது பரவாயில்லை; ஆனால் முடிவாகக் கூறுதற்கில்லை.
நமக்குத் தெரியவரும் இவ்வாய்வுகள் தழுவத்தக்கன என்பதற்கு இன்னும் ஆய்வு தேவை.
அறிந்த ஆய்வு முடிவுகள் இங்கு மீண்டும் கூறப்படவில்லை.
திருத்தம் வேண்டின் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.