அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாகத் திரியும் என்பதைப் பல இடுகைகளில் முன்னர் கூறியுள்ளாம். இவை மறுதலிக்க இயலாச் சான்றுகள் உடையவை.
எடுத்துக்காட்டு: அமணர் > சமணர்.
அட்டி > சட்டி. அடுதல்: சுடுதல். சமைத்தல். அட்டி என்பது வழக்கிறந்த சொல்.
அந்தித்தல் என்பது சுட்டடிச் சொல். இதில் அகரம் அ எனற்பாலது, அங்கு என்று பொருள்படுவது.
இங்கிருப்பது அங்கு சென்றால் அங்கிருப்பதனோடு கூடுதலும் உளது. அங்கு ஏதுமின்றி எதிலும் கூடாமல் ஒழிதலும் அதாவது முடிதலும் உண்டு.
எதையும் சொல்பவன் அங்கு என்பதுடன் வேறு எவ்விடத்தையும் மேலும் குறிக்காமல் கருத்தினை முடித்துவிடுதலும் இறுதியையே அறிவிக்கும்.
அ > அன் > அன்+ து > அன்று ( உண்மையில் இது அந்து என்பதன் வேறன்று, சொல்லாக்கத்தில்.)
அ > அன் து : அந்து ( புணர்வற்ற எழுத்து மாற்று ).
அ > அன் து : அன்று ( புணர்வின் காரணமான திரிபு).
அந்து என்பதை ஆங்கில எழுத்துக்களால் வரைந்தால் அன்`து என்றே வரும்; அந்து என்பதும் வேறன்று. 0ன் = ந்.
அங்கு போய் மற்றொன்றுடன் இணைந்தால் அதுவே அந்தித்தல். இதுபின் சந்தித்தல் என்று மாறிற்று.
அங்குபோய் எதனுடனும் கூடாமல் முடிதல் அந்துதல். அன்றுதலும் அது.
அன்று என்பதும் முடிந்த நாள். இந்நாள் எதனுடனும் கூடாமல் முடிந்தது.
அ இ என்பன சுட்டுக்கள்; அன், இன் என்பன சுட்டு வளர்ச்சி. இன்னென்னும் இறுதி ஏற்றன. இது (ன் என்பது மொழியில் பண்டை விகுதியாகும்).
நீ > நீன் > நீனு என்பதில் 0ன் என்பது ஒரு விகுதி. 0னுவில் ஏறிய உகரம் ஒரு சாரியை.
யா > யான் என்பதிலும் இன்னொற்று ஒரு விகுதியே.
மா = விலங்கு;
மா > மான் என்பதில் 0னகர ஒற்று விகுதியாகி ஒரு புதிய சொல்லைப் பிறப்பித்தது.
கா = காடு; கா> கான் ( காடு என்பதே). விகுதி பெற்றும் பொருள் மாறாமை.
சந்தித்தல் என்பதன் சொல்லாக்கம் உணர்க.
பழைய இடுகை அந்து என்பதையும் வாசிக்கவும். https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html
பிழைபுகின் திருத்தம் நிகழும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.