கொன்றுதான்
கொள்கையைக் கூரிதாய்ச்
செய்யவேண்டின்
என்றுதான்
மாந்தனும் இப்புவி யிற்சிறந்தோன்
என்றுநாம்
ஏற்றுக் கணக்கில் கொளலாகும்?
தின்றுநாள்
போக்கும் விலங்கினும்
கீழ்த்தரத்தோன்
என்றுதான்
அன்னவனை இங்கியம்பல் கூடுமே.
இந்நாள்
அறிவியலில் ஏற்றம் அடைந்தவராய்
மன்னும்
மனிதப் பிறவிகட்கோ இஃதிழுக்கே
ஆகும்;
சமயத் தனைவரும்
ஒன்றென்று
போகும்
மனநிலையில் பொய்யாப் புதுமையுடன்
ஏகும்
நலம்காணும் நாளும் எதிர்வருமோ?
ஞாலம்
சுழலினும் காலம் அறியாப்புன்
கோலம்
பயில்வான் குறைபோக்க நாளும்
முயன்றால்
முடிந்திடுமோ தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.