இன்று முகமென்னும் சொல்லின் அமைப்பை அறிந்தின்புறுவோம்.
இந்த அடிச்சொற்களை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்:
முல் > முன் > மு.
இவை ஒவ்வொன்றிலிருந்தும் பல் சொற்கள் தோன்றியுள்ளன. சொல்லியலில் லகரத்தின் பிந்தியது 0னகரம் ஆகும். பின் 0னகரம் கெட்ட அல்லது மறைந்த நிலையில் மு என்ற எழுத்துமட்டும் நின்று ஒரு சிறு சொல்லாகிவிடுகிறது. இச்சொல் இப்போது தனியாக வழங்கவில்லை. முழுச் சொற்களுடன் கலந்தே வரும். ஆனால் ஒரு காலத்தில் அது தனிச்சொல்லாக இருந்து அதன் தனிவழக்கை அல்லது புழக்கத்தை இழந்துவிட்டது என்பதை அறிக.இதன் விளக்கத்தை வேறொருகால் ஆய்வு செய்வோம்.
இப்போது முக்கு அல்லது முக்குதல் என்ற சொல்லைக் காணவும். இதன் பொருள் முன் கொணர்தல் என்பது; அதுவும் உடலின் உட்காற்றின் மூலம்
அழுத்தம் தந்து வெளிக்கொணர்தல் எனின் வரையறவு சரியாகவிருக்கும். இச்சொல்லில்
மு + கு என்ற இரண்டு உள்ளுறுப்புச் சொற்கள் உள்ளன.
மு: முன் இருத்தல் என்னும் அடிப்படைக் கருத்து.
கு என்பது இன்றும் உருபாக உள்ளது. அவனுக்கு எனின் அது வேற்றுமை உருபாக வருகிறது. இதுவே இச்சொல்லாக்கத்தில் வந்துள்ளது.
மு+ கு = முக்குதல் என்று வினைச்சொல் அமைகிறது.
கு என்பது சேர்விடம் மற்றும் சென்றடைவு குறிப்பதாகும்.
மு + கு = மூக்கு என்ற சொல்லில் மு என்ற முன்மை குறிக்கும் சிறுசொல் முதனிலை திரிந்து மூக்கு என்று அமைகின்றது.
மு + கு + அம் = முகம் என்ற சொல்லில் முன் என்பது முன்பக்கத்தையும் குஎன்பது இருப்பிடத்தையும் அம் என்பது விகுதியாகவும் வந்து சொல்லமைவதைக் காணலாம்.
அம் என்பது விகுதி என்றோம். அது நீண்டு ஆம் என்றும் இறுதியில் விகுதியாகவே நிற்கும்.
இப்படி அமைவது தான் முகாம் என்ற சொல் ஆகும்.
மு+ கு + ஆம் = முகாம் ஆகும்.
முகவை என்ற சொல்லில் மு+ கு + வு + ஐ என்று வந்து இருவிகுதிகள் நிற்கின்றன. இவ்விரண்டையும் ஒருவிகுதியாகக் கருதி வை என்றும் சொல்லலாம். கொலை என்ற சொல் கொல் + ஐ என்று ஐ தனியாக நிற்றல் காணலாம்.
முகன் என்ற சொல்லில் முகம் + அன் = முக + அன் = முகன் என்றாகி முகத்தை உடையோன் என்ற பொருள்தரும். எடுத்துக்காட்டு: ஆறுமுகன்.
முகி என்பது முகன் என்பதன் பெண்பாலாக வருதல் காணலாம்.
இன்னும் பல சொற்கள் இப்பகுதியில் உள்ளன. இன்று இத்துடன் நிறுத்துவோம். பின்னர் தொடர்வோம்.
நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.