மகன்மாரை இழந்துவிட்ட தாய்மார் கூட்டம்
காண்பேனோ எனக்கலங்கும் தந்தைக் கூட்டம்
இகத்திளவல் இல்லையெனும் அக்காள் கூட்டம்
என்று காண்பேன் என்றொழியும் நண்பர் கூட்டம்
நகத்திலினிச் செம்மையிடா நங்கைக் கூட்டம்
நாடெங்கும் உய்த்ததலால் கூடும் நன்மை
முகத்துணித்தீ விரவாதி வெடித்த குண்டால்
மூள்வதுவும் உளதாமோ முயன்று சொல்வீர
ஒழிகதீ விரவாதி உலகின் மீ தே
ஒரு நான்கு பதின்மரையே உயிர் குடித்தார்
பழி முதிர் முறைகளினால் பெறுமோர் நன்மை
பண்பன்பாம் என்பவற்றால் பெறுதல் இன்றேல்
குழிபுகும் சாவினிலே ஒழிதல் நன்றே
குளிர்காசு மீரமதில் கொலைகள் செய்தார்
வழிபுகும் மறவர்தமை வலைவி ரித்து
வதைப்புறுத்து வதனால்வெல் வாய்ப்பும் உண்டோ?.
பொருள்:
இகத்து : இவ்வுலகில்
இளவல் : தம்பி
செம்மை : நகச்சாயம்
உய்த்தது அலால் : ஏற்படுத்தியதன்றி
முகத்துணி : மறைந்து செல்வோர் குறிக்கிறது
மூள்வது : உண்டாவது
நான் கு பதின்மர் : நாற்பது பேர்
பழிமுதிர் : பழி கூடின
வழி புகும் : தம் இருப்பிடம் போம் வழி செல்லும்
வலை விரித்து: அகப்படுத்தி அல்லது மறைவாகத் தடுத்து
மறுபார்வை இட்ட தேதி : 19.2.2019
காண்பேனோ எனக்கலங்கும் தந்தைக் கூட்டம்
இகத்திளவல் இல்லையெனும் அக்காள் கூட்டம்
என்று காண்பேன் என்றொழியும் நண்பர் கூட்டம்
நகத்திலினிச் செம்மையிடா நங்கைக் கூட்டம்
நாடெங்கும் உய்த்ததலால் கூடும் நன்மை
முகத்துணித்தீ விரவாதி வெடித்த குண்டால்
மூள்வதுவும் உளதாமோ முயன்று சொல்வீர
ஒழிகதீ விரவாதி உலகின் மீ தே
ஒரு நான்கு பதின்மரையே உயிர் குடித்தார்
பழி முதிர் முறைகளினால் பெறுமோர் நன்மை
பண்பன்பாம் என்பவற்றால் பெறுதல் இன்றேல்
குழிபுகும் சாவினிலே ஒழிதல் நன்றே
குளிர்காசு மீரமதில் கொலைகள் செய்தார்
வழிபுகும் மறவர்தமை வலைவி ரித்து
வதைப்புறுத்து வதனால்வெல் வாய்ப்பும் உண்டோ?.
பொருள்:
இகத்து : இவ்வுலகில்
இளவல் : தம்பி
செம்மை : நகச்சாயம்
உய்த்தது அலால் : ஏற்படுத்தியதன்றி
முகத்துணி : மறைந்து செல்வோர் குறிக்கிறது
மூள்வது : உண்டாவது
நான் கு பதின்மர் : நாற்பது பேர்
பழிமுதிர் : பழி கூடின
வழி புகும் : தம் இருப்பிடம் போம் வழி செல்லும்
வலை விரித்து: அகப்படுத்தி அல்லது மறைவாகத் தடுத்து
மறுபார்வை இட்ட தேதி : 19.2.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.