உதயம் என்ற சொல் தமிழ் மூலமுடைத்து. எங்ஙனம் என்பது காண்குவம்.
உ - முன்பக்கத்தில் எழுதல். மேலெழுகை. இன்னும் இதற்குப் பல பொருள்கள் உள என்பதை மறத்தலாகாது.
து . உடைமைப் பொருள் அல்லது உடையது என்று பொருள்படும் விகுதி.
தமிழ் இதனை உலகினுக்கே தந்துள்ளது. தமிழ் முன் தோன்றிய மூத்த குடியினர் மொழி. அதனால்தான் உலகிற்கு அளிக்க முடிந்தது. இது நம் பெருமைக்குரியது ஆகும்.
" இட் " என்ற ஆங்கிலச்சொல். இட் என்ற இலத்தீன்,
It is என்பது id est என்று இலத்தீனில் வரும். இதுதான் சுருங்கி i.e., அதாவது என்பதற்கு ஈடாகப் பயன்பாடு காண்கிறது.
து >< த். து என்பதில் உகரம் சாரியை. உண்மையில் சாரியை விலக்கி நோக்குவோமாயின் இது என்பது இத் என்பதே. ஒரு சொல்லினைச் சார்ந்து இயைந்து வருமொலியே சாரியை.
இப்போது து என்னாமல் த் இட்டுக்கொள்வோம்.
உ + த் + அ + அம். இதன் விளக்கம்: முன்னிலையில் ( உ) ; த் = அது; அ = அங்கே; அம் ( எழுகிறது ) என்று வாக்கியமாக்கி இன்புறுக. அதுவே உதயம்.
பெரும்பாலும் ஒன்றை உதைக்கும் போது கால் முன் சென்று தொடும்.
உது > உதை: தெரிகிறதன்றோ. உ + த் + ஐ என்றும் விளக்கலாம். ஐ: கீழே காண்க.
ஊருதல் என்பதும் நகர்தலும் ஏறுதலும் குறிக்கும். ஊ என்பதும் அதன் குறுக்கமான முன்னிலைச் சுட்டு உ என்பதும் முன் பக்கல் எனற்பொருட்டு.
பக்கல் = பக்கம். ஊ உறுதல்: ( இக்கால வழக்கில் சொல்கிறோம் ). ஊ உறு > ஊரு(தல்).
சுட்டுக் கருத்துகளைக் குறித்துக்கொள்ளுங்கள்.
உதையம் என்பது சுருங்க, உது + ஐ + அம் என்றும் விளக்கலாம். ஐ என்பது மேல் . இது குறுகும் என்று தொல்காப்பியம் உரைக்கிறது. ஆகவே ஐ > அ.
ஆகவே உதையம் உதயம் ஆகிறது.
இதில் ஐயமொன்றும் காணேன் ஐயனே.
இந்திய மொழியாகிய சங்கதத்தை இந்தோ ஐரோப்பியம் என்று கூறும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஒருபுறம் நிற்க. அதன் பல சொற்கள் ஐரோப்பியத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டன. கடன் ஒன்றுமில்லை. திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்.
உ என்பது பலமுறை விளக்கப்பட்டுள்ளது. உ = முன் (உள்ளவர்). தரவு > தருவது. படை நடத்துபவர் பெரும்பாலும் முன் செல்வர். அவர்கள் தருவது உத்தரவு. சில வேளைகளில் பின்னிருந்து ஆணைகளைப் பிறப்பிக்கலாம் எனினும் முன்னின்று கட்டளை வழங்குவதே பெரும்பான்மை. இந்தப் படைச் சொல் பின் பொதுவழக்கில் வந்துவிட்டது. என்றாலும் அதிகாரத் தரவையே குறிக்கிறது.
மேலிருப்பதற்குத் தாங்குதல் தருவது உத்தரம். தரு > தரம். உ என்பது மேல் என்றும் பொருள்படும்.
நீ உன் என்பவற்றில் உ என்பதிலிருந்தே உன் வருகிறது. இப்போது இது
தெளிவுபட்டிருக்கும்.
திருத்தம் பின். தட்டச்சுப் பிழைகள்: தன் திருத்தப் பிழைகள்.
திருத்தம் செய்யும்வரை திருத்திக்கொண்டு வாசித்தல் - நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.