எமக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்,
கடவுளாவது கத்திரிக்1 காயாவது என்று சொல்லுவார்.
இவர் திருமணம் செய்து ஐந்து குழந்தகள் பிறந்தனர். எல்லாம் ஆண்கள். பெயர் வைக்கும்போது கடவுள் பெயரோ அல்லது பத்திமான்`கள் பெயரோ வைக்கக்கூடாது என்று கவனமாக இருந்தார். நாத்திகத்தில் பெயர் விளங்கிய பெரியோர்களின் பெயர்களையே வைத்தார். இதன்மூலம் இவர் பையன்`கள் பத்திமான்-கள் ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டார்.
பையன்`கள் வளர்ந்து பரம பத்தர்களாகிவிட்டனர். ஒருவன் முருக பத்தன். இன்னொருவன் சிவபத்தன். மூன்றாமவன் விட்ணு (கண்ணன்) பத்தன். நான் காவது நபர் அடிக்கடி காவடி தூக்கிக்கொண்டு பல கோயில் வைபவங்களில் கலந்துகொள்வான். ஐந்தாவது பையன் கைலாசம், கெடார்நாத் ஆலயம் எங்கும் அடிக்கடி போகத் தொடங்கிவிட்டான்.
எல்லாம் இப்படி ஆகிவிட்டார்களே என்று அவருக்குப் பெருங்கவலை.
அண்மையில்தான் காலமானார்.
படிப்பில் பையன் கள் அனைவரும் நன்றாகவே செய்து நல்ல வேலைகளில் அமர்ந்தனர்,
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்............?
அடிக்குறிப்பு:
கத்தரிக்காய் என்று எழுதப்பெறும்.
அரி என்பது சில நிறங்களைக் குறிக்கும். பொதுப்பெயராய் நிறம் என்றும் பொருள்தரும். கொஞ்சம் கருவலாக இருப்பதே பெரும்பான்மை. கருத்த அரி > கருத்தரி > கத்தரி என்று அமைந்தது. சறுக்கரம் என்ற சொல் சக்கரம் என்று வந்தது காண்க. இவைபோல்வன இடைக்குறை.

ari | 1. green; 2. yellow, brown, tawny, fawn colour; 3 colour; |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.