பேட்டரி, பாட்டரி என்னும் மின்சேமி
பாட்டியுடன் ஒரு பேரன் கைப்பேசி வழியாகப் பேசிக்கொண்டிருந்தார் . திடீரென்று கைப்பேசி நின்று உரையாடல் அறுந்துபோயிற்று. என்ன என்று பார்க்கும்போது கைப்பேசியில் "பேட்டரி" என்னும் மின்சேமிப்பு (மின்சேமி ) தீர்ந்துவிட்டது. அதில் மீண்டும் மின்னாற்றலை ஏற்ற வேண்டியதாயிற்று.
என்னைத் தொடர்பு கொண்டு, அந்தப் பாட்டியின் பேரன் கேட்டார்.(இது இலக்கணப்படி தவறு: ஒருமை பன்மை மயக்கம்) இந்தப் பாட்டி என் அறைக்குப் பக்கத்தில் இருந்ததால், நான் இதை அறிந்து பேரனிடம் தெரிவித்தேன் - ஒரு குறுஞ்செய்தி மூலமாக.
மின்சேர்வி:
என் உரையாடல் தமிழில் இருந்தது, ஆனால் நான் மின் கலம் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்தியது மின்சேர்வி என்ற சொல்.
நான் கொடுத்த தகவல்: " பாட்டி கைப்பேசியில் மின்சேர்வி தீர்ந்துவிட்டது" என்பதுதான்.
சேர் என்ற சொல் ரகர ஒற்றை இழந்து சிலவிடத்து சே என்று வரும்.
சேர் > சேர்மித்தல் > சேமித்தல் : சேமிப்பு.
சேர்கரித்தல் - சேகரித்தல்: இதில் ரகர ஒற்று வீழ்ந்தது.
இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: நேர்மித்தல் ஆகும். நேர்மித்தல் என்றால் ஒரு பட்டியல் பெயர்களில் ஒவ்வொன்றுக்கும்
நேர் எதிரே குறிப்பு எழுதிவைத்து நிறுவுதலைக் குறிக்கும்.
கருணாகரன் ............ தளபதி.
அதாவது கருணாகரன் தளபதியாய் நேர்மிக்கப்படுகிறார். இது பின்னாளில் நேமித்தல் என்று தன் ரகர ஒற்றை இழந்தது.
ஓர்மித்தல் என்ற சொல் மலையாளத்தில் வழங்குகிறது. இதன் பொருள்: நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது. ஆனால் இச்சொல் ஓமித்தல் என்று திரியவில்லை. ரகரம் நன்றாகவே ஒலிக்கப்படுகிறது. சொற்களைக் கவனமாக உச்சரிப்பவர்கள் மலையாளமக்கள் ஆவர்.
மின்னடை
இவை ஒரு புறம் கிடக்கட்டும். மின்சேர்வி என்பதையே நான் பயன்படுத்தினேன். ஒரு சமயம் : மின் அடை அல்லது மின்னடை என்பதைப் பயன்படுத்தினேன், ஒரு பாட்டரியில் மின் ஆற்றல் அடைந்து வைக்கப்படுகின்றது. ஆகவே இதுவும் நல்ல மொழிபெயர்ப்பே.
மின் கலம்
ஒரு மின்சேர்வி ஒரு சட்டிபோல; அதற்குள் மின் ஆற்றல் பெய்து வைக்கப்படுகிறது. ஆகவே கலம் ஆகலாம்.
ஆற்றலடை:
ஆற்றலடை என்றும் சொல்லலாம். மின் ஆற்றலை அடைந்து வைத்துள்ளதே பாட்டரி-- ஆற்றலடை. தேனீக்கள் தேன்சேகரித்து வைத்துள்ள அடைவு தேனடை எனப்படுகிறது. அதேபோல ஆற்றல் அடைந்து வைத்துள்ள அடைவு ஆற்றலடை ஆகிறது. நன்றாகவே உள்ளது.
இருதா:
இனி சந்தா, வாய்தா முதலிய சொற்களின் அமைப்பைக் காண்பீர்களாக. சம் - சேர்தலைக் குறிப்பது; தா = சேர்தலுக்குத் தரவேண்டிய கட்டணம். ஆகவே சந்தா ஆயிற்று. சம் என்பது தம் என்பதன் திரிபு. முன் இடுகைகள் காண்க.
இதே பாணியில் அமைந்த இன்னொரு சொல்: நிலம் முதலியவற்றின் விளைச்சல்களிலிருந்து ஒரு பகுதியை வரியாகக் கொடுக்கவேண்டியுள்ளதைக் குறிக்கும். . அப்படிக் கொடுக்கப்படுவது வாய்தா எனப்பட்டது : அதாவது வருவாயில் தா என்பது வாய்+தா = வாய்தா.
படுதா என்ற சொல்லைப் பாருங்கள். போர்வைபோலப் படர்வாக பிற பொருள்கள் மேல் போட்டு மூடத் தருவது படுதா. படு= படர்வாக. அல்லது மேலே படுமாறு; தா= போட வழி தரும் விரிப்பு. படுதா என்பது நல்ல அமைப்பான சொல்லே.இவை எல்லாம் மிக்க எளிமையான சொற்புனைவுகள். இவற்றைப் பின்பற்றி பாட்டரி என்பதை இருதா என்று கூறலாம். இருப்பில் இருப்பதாகிய மின்னாற்றலைத் தருவது இருதா. மின்னடைக்கு இருதா என்பதும் பொருத்தமாகத்தான் தெரிகிறது. முன் அமைந்தவற்றை ஆராய்ந்து அதேபாணியில் அமைக்க என்ன கட்ட(கஷ்ட) மென்று கேட்கிறோம்? ஒவ்வொரு கைப்பேசியிலும் ஓர் இருதாவாவது தேவை.
இப்போது இங்கு தரப்பட்ட மொழிபெயர்ப்புகள்:
மின்சேமி
மின்சேர்வி
மின்னடை
ஆற்றலடை
இருதா
மின் கலம்.
ஆங்கிலத்தில் பாட்டரி என்பது அடிப்பு என்று பொருள்படும் சொல். மின் ஆற்றலை அது அடிக்கிறது. அதாவது செலுத்துகிறது. அடிக்கும் மட்டை பேட் எனப்படுகிறது. இங்கிலாந்துச் சட்டத்தில் ஒருவனை அடித்தால் அது பேட்டரி என்னும் குற்றம். இது ஆங்கில ஒருமைச்சட்டத்தின்படியான குற்றவியற் குற்றம் . English common law, criminal law. சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில் இதை voluntarily causing hurt என்று சொல்கிறோம். பாட்டரி என்ற ஆங்கிலப் பதத்தில் மின்சார்ந்த சொல் அல்லது பொருண்மை எதுவும் இல்லை. இதற்குச் சொல்வழக்குத் தான் காரணமாகிறது.
வேறுபட்ட வகையாக மொழிபெயர்ப்புகளை நீங்கள் கண்டிருந்தால் இங்குப் பின்னூட்டமிட்டுத் தெரிவியுங்கள்.
திருத்தம் பின்.
( சில மாற்றங்கள் காணப்பட்டன. கவனிக்கின்றோம்).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.