நம் தொன்மங்களில் வரும் அழகிய பல பெயர்களில் சிலவற்றைத் தமிழின் மூலமாகப் பொருள் கூறிய இடுகைகளை முன்பு வாசித்திருப்பீர்கள்.
இர் > இர் +ஆம் + அன் = இராமன். ( தமிழின்படி பொருள்: கருநிறமுடையோன். உலகில் மிகப் பெரியது விண். அந்த விண்ணின் நிறம் கருமை. அங்கு சூரியன் (< சூடியன் ) ஒளிவீசுவதால் அது (கருமை) அவ்வளவாகத் தோன்றுவதில்லை. இரவில் பார்த்தாலே ஓரளவு புரியும். அந்தக் கருமையை நிலவு நட்சத்திரங்கள் முதலியவை கொஞ்சம் கலைத்துவிடக்கூடும். இராமர் விண்ணின் நிறத்தவர். கண்ணனும்தான். )
இர் > இரா > இரா+வண்ணன் > இராவணன் ( ஓர் ஒற்றுக் குறைந்த இடைக்குறை). எல்லாம் என்பது எலாம் என்று கவிதையில் வருகையில் அழகாக உள்ளதன்றோ?
அனுமன்: மனிதனுக்கு அண்மையானவன். அண் = அன் =அனு. மன் - மனிதன் என்பதன் அடிச்சொல்.
கைகேயி - கை நீட்ட முடியுடையவள். (முன் இடுகைகள் காண்க).
பீமன் = பீடுடைய மன்னன். பீடு+ மன் = பீடுமன் > பீஷ்மன்.
தமிழ்ச்சொற்களைக் கவினுறுத்த ஜ, ஷ, ஹ இன்ன பிற தோன்றி இன்புறுத்தும். வேறு சில சொற்களும் விளக்கியுள்ளோம். அவற்றைப் பழைய இடுகைகளில் காண்பீராக.
இன்று இலக்குவன் அல்லது லட்சுமணன் என்ற பெயரைப் பார்ப்போம். இதுவும் இராமகாதையில் உள்ள பெயரே. காதை = கதை.
சீதையைக் கட்டுப்படுத்தத் தரையில் ஒரு கோடு வரைந்து இதைத் தாண்டிச் செல்லாதே என்று கட்டளை இட்டவன் இலட்சுமணன். "இலட்சு" என்பது இலக்கு என்பதும் ஒருபொருள் குறிக்கும் திரிபுகள்.
ஒ.நோ: பட்சி >< பக்கி ; நக்கத்திரம் > நட்சத்திரம். பக்கம் > பட்சம்
கோடும் இலக்கும் தொடர்புடைய கருத்துகள். கோடிழுத்த இடமே இலக்கு ஆகும்.
இழு> இலு என்றாகும். இன்னொரு எடுத்துக்காட்டு: பழம் > பலம். மாம்பலம் என்ற ஊர்ப்பெயர் காண்க. பழ ஆகாரமே பல ஆகாரமாகி, பலகாரம் என்று தோன்றி பழத்துடன் பிற ஆகாரங்களையும் குறித்ததாகத் தமிழறிஞர் கூறியுள்ளனர்.
அலங்காரம் என்பது அழகு அல்லது அழகுபடுத்துதல் என்பதே. அடிச்சொல்: அழ. அழ என்பதன் திரிபு அல. அலங்காரம் என்பதை அலம்+காரம் என்று சிலர் பிரிப்பர். உண்மையில் இது : அல+ கு + ஆர் + அம் ஆகும். அழகுக்கு நிறைவு அல்லது அழகுசேர் நிறைவு என்பதாகும். ஆர்: நிறைதல். அம் விகுதி.
கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் இடைநிலை. இது வேற்றுமை உருபாய் பிறவிடத்து வரும். அல+ கு என்பது அலங்கு என்று மெலிந்து நின்றது, அலக்கு என்று வலிக்கவில்லை . அதாவது வல்லெழுத்து மிகவில்லை. அலங்கு ஆர் அம் - அலங்காரம் : அழகின் நிறைவு எனினுமாம். இதை இங்கு சொல்லக் காரணம்: இழு> இலு போலத் திரிந்தது அழ>அல என்பது; பழ > பல என்பதுமது.
இனி இலக்குவனுக்குத் திரும்புவோம். இலு> இலக்கு > இலக்குவன், இலக்குமணன் என்பது இன்னொரு வடிவம். அதைப் பின் விளக்குவோம்.
இலக்குவன் என்பது காரணப்பெயர். இயற்பெயரன்று. தசரதன் என்பதும் காரணப்பெயரே. இயற்பெயர்களைக் காண்டல் அரிதே. கோடிழுத்ததால் இப்பெயர் வந்தது என்பதறிக. வால்மிகி தமிழறிந்தவர் என்பது தெளிவு. மற்றும் சங்கப்புலவருமாவார்.
இலு + கு = இலக்கு. கோடிழுத்த இடம்.
அடிக்குறிப்புகள்:
இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு விடைதெரியுமா?
வாசித்தல்: இச்சொல் எப்படி அமைந்தது?
வாசித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.