உலகெங்கும்
போரின்மை உயர வேண்டும்
ஊரெங்கும்
ஊணுண்மை உறுதி வேண்டும்
விலகில்லாக்
கல்விநிலை விளைய வேண்டும்;
வீடுதொறும்
குடும்பங்கள் மகிழ வேண்டும்;
சொலவாகாப்
பன்னன்மை சுனையூற் றாகிச்
சூழுலகில்
வாழ்வுயரப் பழிதீர் பாடு
பலகாலம்
பட்டொளிர்ந்த பகலோன் ஆநான்
பார்நீங்கிச்
சென்றனரோ பதறும் நெஞ்சே.
பொருள்:
போரின்மை : அமைதி, சமாதானம்
ஊணுண்மை : சாப்பாடு உள்ளதாவது;
விலகில்லா : தவிர்த்தல் இல்லாத; இல்லையென்னாத
சொலவு ஆகா : இன்னும் உரைக்க முடியாத; எண்ணற்ற
பகலோன் : சூரியன்
ஆநான்: கோஃபி ஆநான் முன்னாள் ஐ நா பொதுச்செயலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.