Pages

புதன், 20 ஜூன், 2018

கடல் தீங்கும் மாலுமியும்.


உமி என்பது யாது:

மாலுமி என்ற சொல்லை அறிவதற்குமுன் உமி என்றால் என்ன என்பதை  யறிந்துகொள்வோம்.

குத்துமி என்ற சொல்லில் உமி என்பது செங்கல் வேலை குறிக்கும்,
அதுவே  சலிக்கப்பெறாத உமியையும் குறிக்கும்.

குற்றுமி என்று வந்துஒரு வரியையும் ஒரு நெல்லின் நீங்கிய உமியையும் மற்றும் குற்றுயிரையும் குறிக்கும்.

குற்றுயிர் என்றால் இனிக் குறுகிய காலமே இருக்குமென்று அறியப்பட்ட உயிர்.
"குற்றுயிரும் கொலையுயிரும் என்பது வழக்கு.

கூருமி என்பது சிறுநீரினினின்று வெளிப்படும் உப்பு.

உமிதல் -  துமிதல். (ஆக்கத்தொடர்புடைய சொற்கள்.) 
உமிதல் =  உமிழ்தல் என்பதுமாம்.  உமிழ்நீர் என்பது உமிநீர் என்றும் குறிக்கப்பெறுவதுண்டு.  உமிழ் என்பதை உமி என்பது பேச்சு வழக்கு.

மெல்லிய நகம் உமிநகம் எனப்படும்.

உமி நீக்கிய அரிசிக்குத் தொலியல் என்றும் பெயர்.

உமியல் என்பது வசம்பு.

உமாவின் கணவன் சிவனாதலின் அவற்கு உமி என்றும் பெயர்.  உமாவை உடையோன்.   உமா+ இ =  உமிஆ என்ற எழுத்து மறைந்ததுஉம்+ஆ என்பதில் இறுதியில் நிற்பது ஆஅதாவது: உமாஉம்+ஆ > உமா+இ > உமி.   இது சொல்லமைப்புப் புணர்ச்சிஇதில் முழுச்சொற்கள் புணர்ச்சி இல்லை.

உமாவிலிருந்து வெளிப்படுவோன் சிவன்; உமாவே ஆதிப்பரம்  ஆகும். (ஆதிபராசக்தி)

இவற்றை மனத்தில் இருத்திக்கொள்க.  உமி என்பது பெரிதும் வெளிப்பாடு குறிக்கும்  சொல்.  கலஞ்செல்வோனும் நிலத்தினின்று வெளிப்படுவோனே ஆவான்,

மையக்கருத்து:   வெளிப்பாடு அல்லது வெளிப்படுதல்.

உமி என்பது ஒரு சுட்டடிச் சொல்.  உ = முன்னிருப்பதுஇ-  இங்கிருப்பதுஆக உமி என்பதன் பொருள் இங்கிருந்து அங்கு வெளிப்படுவது  என்பதுதான்.  இங்கு என்பது நெல்லைக் குறித்தது.    உ என்பது  முன் வெளிப்படுவதாகிய தோல்.

இடச்சுட்டுக்களைக் கொண்டே பல்லாயிரம் சொற்களை அமைத்துத் திகழ்வது
தமிழ்மொழி.

இது முன்பின்னாக அமைந்து தோலைக் குறித்துள்ளது.  இதையறிந்த பிற்காலத்தில்  பிதா என்ற சொல்லையும் இதே முறையில் தோற்றுவித்தனர்.

பி = பின்தாய் = தாய்க்கு.  ஆக பிதா.
ஒப்பு:  உ= முன் வெளியாகுவது; இ= இங்குள்ள நெல்லினின்று.  ம் என்பது இரு சொற்களுக்கும் இணைக்கும் ஒலியாக வந்தது.   உ+ம்+இ.

மகர ஒற்று ஓர் இணைப்பொலியாக வருவதை கருமி என்ற சொல்லில் கண்டுகொள்ளுங்கள்.  கரு+ம்+இ = கருமி.  வெறுக்கத்தக்கதாகிய கஞ்சத்தன்மை. கருநிறம் என்ற வெறுத்தகு எண்ண நிலையில் எழுந்த சொல்.

நெல்லிலிருந்து வெளிப்பட்ட உமி, பயனற்றுப் போகிறது.  எரித்துக் கரியாக்கலாம்.  பல் துலக்கினால் பல் வெள்ளையாகும் என்பர்.

உமி என்பது பயனற்றதாகையினால் உமிதல் என்ற வினைச்சொல் அழிதல் கருத்தை எட்டிப்பிடித்தல் கண்டுணர்க.

உமிதல் (தன்வினை)  -  உமித்தல் (பிறவினை).

கடலுக்குப் போவதைப் பண்டை நாட்களில் சிலர் வெறுத்தனர்.

கடலிலிருந்து ஆலகால விடம் வருமென்றனர்.  ஆனால் கடலுக்குப் போனாலும்  நீண்டநேரம் இருக்கலாகாது என்று நினைத்தனர்.  கடைதல் என்பது நெடிதுநிற்றல் பற்றிய அச்சம் குறிக்கிறது.

கடலுக்குச் செல்வோரை மால் அழித்துவிடுவார்!.

இதிலிருந்து மாலுமி என்ற சொல் உருவெடுத்தது,

மால் -  இருள்கடல். கடலோனாகிய விண்ணவன், (விஷ்ணு).
உமி = அழிதல்.

மாலென்பது:  காற்று, முகில், எல்லை, செல்வம், குழப்பம் என்றும் இன்னும் பலபொருளுமுடைய சொல்.

இவற்றுள் ஒன்றோ பிறவோ பொருந்தும் காரணத்தால் அழிவை எட்டுவோன் மாலுமி எனினுமாம்.

எல்லை கடந்து காற்றிலும் மழையிலும் துன்புற்று மனங்குழம்பி  செல்வமிழந்து அழிவோன் எனினும்  அமையும்.


எனவே கடலில்செல்லும் கலஞ்செலிமாலுமியாகினான்.

சிற்பன் எழுத்    தோவியத்தில்  செவ்வரசு  நாவாயின்
அற்புதம் சூழ்  மாலுமிஎன் றாடு.

--  திரு வி.க

பிற்காலக் கருத்தில் மாலுமி உயர்ந்தவனே.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.