காண்குறைசார் கட்சி கருநாட காவினிலே
வீண்பறைதான் இந்நாள் முழக்கியதோ===தானிறந்தே
அடுத்து நின் றோர்க்க தளித்தவா தாரம்
படுத்துவிட்ட தற்கோ படம்.
பொருள்:
காண்குறைசார் : ஒரு கட்சியின் பெயர். இந்த
எழுத்துப்பெயர்ப்புக்கு வேறுபொருள்களும் ஊட்டலாம்.
கருநாடகாவினிலே : கர்நாடகமாநிலத்தில்.
வீண்பறைதான்: பயனற்ற ஆரவாரம்.
முழக்கியதோ: வெளிப்படுத்திக்கொண்டிருந்ததோ.
தான் இறந்தே - தான் தோல்வி அடைந்து.
தோல்வி என்பது ஆள்வதற்குத் தகுதியை இழப்பதாகும்.
இறப்பதற்குச் சமானம்,
அடுத்து நின்றோர்க்கு: அவர்களுக்கும் குறைவான தகுதி
அடைந்தவர்கள் கட்சிக்கு.
அளித்தவாதாரம் - அளித்த (தந்த) ஆதாரம்.
படுத்துவிட்டதற்கு - இனி எழும்ப வழியில்லையாய்
வீழ்ச்சி அடைந்ததற்கு.
படம் - எடுத்துக்காட்டும் அறிகுறி.
தேர்தலுக்குமுன் சம நிலையிலிருந்தபோது அளிக்காத
ஆதரவைத் தோற்றபின் அளிப்பது, இனி நிலைநிற்க
முடியாமையால் கீழ்நிலையில் உள்ளோரிடம் சரண்
அடைந்து மேலிருப்போரிடம் சம்மாகிவிட நினைக்கும்
உத்தியாம். இத்தகைய உத்தி எதிர்காலத்துக்குக்
கைகொடுக்குமா என்பதே கேள்வி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.