நல்ல கூத்தாக இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில்
இப்போதுதான் மக்கள் தேர்ந்தெடுத்தோருள்
இருவர் காணாமற் போய்விட்டார்களாம்.
கட்சி மாறிவிட்டார்கள் என்பது
ஊடகங்கள் எழுப்பும் ஐயப்பாடு.
எது எப்படி ஆனாலும்
எடியூரப்பா (ப ஜ க ) முதல்வராகப் பதவி உறுதிமொழி
எடுத்துக்கொண்டுவிட்டார்.
அதைத் தடுக்க எதிர்க்கட்சி மேற்கொண்ட
உச்சநீதி மன்ற வழக்கு
தள்ளுபடியாகிவிட்டதாம்!
இனி நடப்பன கவனித்துக்கொண்டிருங்கள்.
இப்போது கட்சி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
கள் என்பது அடிச்சொல்.
கள்+து: கட்டு, கட்டுதல். வினைச்சொல் ஆக்கம்.
கட்டுவது என்றால் தனித்தனியானவற்றைச் சேர்த்து இணைத்தல்.
புல்லைக் கட்டுதல். புல்லுக் கட்டு.
மாடு கட்டுதல்.
கலியாணம் கட்டுதல்.
இப்படிக் கட்டுதல் பல.
கள்+தி = கட்டி. கட்டு+ இ = கட்டி எனினுமாம்.
இருவழியிலும் சொல் அமையும்.
சீனிக் கட்டி. சக்கரைக் கட்டி முதலிய கட்டிப் பொருள்கள்.
கட்டி புறப்பாடு.
கள்+து+ஐ = கட்டை. கட்டு+ஐ = கட்டை எனினுமாம்.
குட்டை > கட்டை என்றும் அமையும்.
குள் ( நீட்டமில்லாதது) என்றும் பொருள். கட்டப்பட்டது
என்றும் பொருள்.
கள் என்ற அடிக்குப் பல பொருள் உண்டு. கருப்பு என்பதும்
ஒன்று. கள் குடிவகை இன்னொன்று.
கள் > கழ ஒ.நோ: அள் > அழ. கொள் > கொழு. (முன் இடுகை)
கழ > கழலை: கட்டி. புறப்பாடு.
கழ> கழகம்.
கள > களம்: பலர் ஒன்றாக நிற்குமிடம். அல்லது பலரும்
பொருள்களும் சேர்ந்திருக்குமிடம். எ-டு: போர்க்களம்.
கள்+சி : கட்சி.
பலர் இணைந்திருக்கும் நிலைமை.
சி: தொழிற்பெயர் விகுதி. அழல்> அழற்சி; மலர் > மலர்ச்சி எனக்
கண்டுகொள்க.
கட்சிகள் இரண்டு மூன்று தொகுதிகளானால் >
மூன்று கட்சிகள் என்பர்.
கள் என்னும் அடி பல சொற்களைப் பல பொருள்பட
விளைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.