Pages

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

கத்தியும் சத்திரியரும்.

கத்தி என்பது  ஒரு பேச்சுவழக்கில் எழுந்த சொல். இந்தச் சொல் கற்காலத்திலிருந்து தமிழில் வழங்கிவரும் சொல் என்பது  அதன் அமைப்பைப் பார்த்தால் நன்' கு புரிந்துகொள்ளலாம்.

இந்தியக் கற்காலமென்பது ஏறத்தாழ கி.மு. 1200க்கு  முந்தியது  என்பர். ( Before  Circa 1200 BCE -  1000 BCE. ).  முதலில் பொன்னைக் கண்டுபிடித்தார்களா இரும்பைக் கண்டுபிடித்தார்களா என்றால்,  பொன்னையே என்று ஊகிக்க வேண்டும். சொல்லாய்வுப் படி  இரும்பின் பெயர் "இரும் பொன் " என்பதன் திரிபு.  பொன்னை அறிந்தபின் இரும்பை அறிந்தபோது அதைப் பெரிய பொன் என்றனர் தமிழர்.  இரு (ம்) -  பெரிய. பொன் . -  சற்றுக் கலப்பான தங்கம். தூய தங்கம் சீனர்கள் பயன்படுத்துவர் .

இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்த அறியுமுன் தமிழர்கள் கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.  கூரான கல்லைக் கொண்டு, தமக்கு வேண்டிய பொருள்களைப் பிளந்து துண்டுகளாக்கினார்கள்.  ஒரு பொருளைப் பகுத்துத்  துண்டாக்குவதற்குப் பயன்படுத்திய கல்லே கத்தி ஆனது.

கல் >  கல்+தி >  கல்த்தி >  கத்தி.

கத்தி பிற்காலத்து இரும்பால் செய்யப்பட்டது.  கல் என்ற சொற்பகுதி மறக்கப் பட்டது .  அது நல்லதே.

( சேலை என்ற சொல்லுக்குப் பொருள் மரப்பட்டை என்பது.  இப்போது நூலால் செய்து அணிந்தாலும் பெயர் அதுதான்.)

( சறுக்கி அருகில் செல்வது  சறுக்கரம்.  பின் உருளையால் அமைந்தாலும் அது சறுக்கரம் தான்.  அது சக்கரம் என்று திரிந்தது. )

இச்சொல்லில் இருக்கும் ல் என்ற ஒலி தி என்ற விகுதியின் வரவுக்குப்பின் ஒரு தடைபோலுமிருப்பதால் அது விலக்கப்பட்டது. இப்படித் தகர வரவால் லகர ஒற்று  மறைந்த சொற்கள் பலவாகும். (  நமது முன் இடுகைகளைப் படித்துப் பட்டியல் போட்டுக்கொள்ளலாம் ).

கல்+தி > கற்றி > கத்தி என்று காட்டினும் அதே.

வெற்றி என்ற எழுத்துமொழிச் சொல் வெத்தி என்று பேச்சில் வருவது போலுமாம்.  சிறு அம்பலம் என்பது சிற்றம்பலம் ஆகிப் பின் சித்தம்பலம் > சிதம்பரம் ஆகிவிட்ட திரிபுகளையும் அறிக.  அம்பரம் என்பதை ஈண்டு விரிக்கவில்லை.

கத்தியிலிருந்து யாமெடுத்துக்கொளவது கத்திரியர் என்ற சொல். இதுபின் சத்திரியர் என்று மாறி அயல் நூல்களுக்கும் சென்றது.

கத்தி கொண்டுபோராடும் தொழிலை மேற்கொண்டோர்,  கத்திரியர்.
கத்தி + இரு + இ + அர்.   கத்திரியர்,  பின் சத்திரியர்.   இதன் முன்பொருள் கத்தியுடன் இருப்போர் என்பது.  க - ச  திரிபு .   சேரலர்  >  கேரளர்  என்பது உதாரணம் .

கத்தியுடன் இருப்பவனைக் குமுகம் ஒருகாலத்தில் உயர்வாகக் கருதவில்லை.  இந்தக் காலம் மனுவின் காலத்துக்கு முன் ஆகும்.  மேலும் இறைவனை உணர்ந்தோர் போல் இவர்கள் அமைதியான குணம் உடையவர்களாகவும் இருக்கவில்லை.  கொலை முதலியன செய்ய அவர்கள் தயங்கியதும் இல்லை. "  மண்டை ஓடுகளின் மேலே நடந்து மண்டலத்தை ஆண்டவர்கள் " என்று கவியரசு கண்ணதாசன் எழுதியது இவர்களைப் பற்றித்தான். ஆனால் சட்டத்துறை அறிஞர்கள் தம் சிந்தனைக் கட்டுரைகளில் சொல்வதுபோல் முதலில் வலக்காரத்தால் நாட்டையே அலைக்கழித்தாலும் இறுதியில் அமைதியை நிலை நாட்டி, ஆட்சியை ஏற்படுத்தி முடி சூடியபின் ஒழுங்கை நிலைநாட்டிவிட்டால் கத்திரியர் ( கத்தி வைத்திருந்தாலும் குண்டுகள் வைத்திருந்தாலும் )  அல்லது ஆயுதபாணிகள்  அரசர்களாய்
உயர்ந்துவிடுகிறார்கள் என்பதை அறியவும். (When social order sets in and peace prevails,  legitimacy returns. )

குழப்பமான காலங்களில் நீதி  சட்டம் ஒழுங்கு என்பவை நிலை நாட்டப் படுதல் பற்றி இங்கிலாந்தின் டென்னிங் பிரபுவும்  பிரபுக்கள் அவையும் தந்த நீதி  முடிபுரைகள் சிந்தனைக்  கருவூலங்கள். (Lord Denning M R in the English Court of Appeal and House of Lords on a Rhodesian case ).  ஒரு காலத்தில் கெட்டது  இன்னொரு காலத்தில் நல்லதாகிவிடும்.

அச்சமே இல்லாதவனுக்குக் கத்தி எதற்கு?  இந்த வகையில், கத்தி இருப்போர் அச்சமுள்ளோர்.   இரிதல்:  அஞ்சுதல்.  இரிபு:  அச்சம். இன்னும் பிற பொருளும் உள்ளன.

ஆகவே கத்தி + இரியர் என்பதை  கத்தியுடன் அஞ்சி நின்றோர் என்றும்  பொருள் கொள்ளவேண்டும்.

இருப்போர் அச்சமுள்ளோர்.  பணம் இருப்போர் அஞ்சுவர்.  கத்தியிருப்போர் அஞ்சுவர்.

கத்தி + இரு  அல்லது கத்தி இரி என்று எப்படிக் கொண்டாலும் பொருள் அதுதான்.  கத்தி வைத்துக்கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள்.

நாம் கத்தி + இரு + இ + அர்  என்பதையே இங்கு கொள்கின்றோம்.

சத்திரியர் என்ற சொல்லுக்குச்  சரியான பொருள் தமிழே தரும்.

In the end:  அச்சத்தைப் போக்கியது  ஆட்சியை ஆக்கியது கத்தி

அறிக மகிழ்க.

மெய்ப்பு  - பின்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.