Pages

திங்கள், 9 ஏப்ரல், 2018

நிறுவாணம் - ஆணாய் நிறுவுதல்.



நிறுவாணம்  -  ஆணாய் நிறுவு

திருமணத்திற்கு முன் சிற்றூர்களில் மணமகனை ஆணாய் நிறுவும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டது.  இதைப் பெரும்பாலும் வைத்தியர்களோ மயிர்வினைஞர்களோ செய்தனர்.  சிலவிடத்து இவ்விரு தொழில்களையும் ஒருவரே மேற்கொண்டனர்.

பையனை ஆடை களைந்து பார்த்து,  மணவினைக்குத் தேர்வு செய்தனர். பெண் வீட்டாருடன் பின் இவர்கள் தொடர்புகொண்டு தேர்வு முடிவை அறிவித்தனர்.

ஆணாய் நிறுவுதல் -  நிறுவு  ஆண்  = நிறுவாண் ஆகியது.   பின் நாளில் ஓர் அம் விகுதி சேர்க்கப்பட்டு நிறுவாணம் என்ற சொல் உருவாக்கப்பட்டது.

நிறுவாணம் என்பது இறுதியில் நிர்வாணம் என்று எழுத்தில் புகுந்தது.

இச்சொல் பின்னர் கடவுட் கொள்கைகளிலும் புகுந்து  நிர்வாண நிலை என்று மறுபொருளாக்கம் பெற்றது.  ஆதிப்பொருண்மை மறக்கப்பட்டது.

படைகளில் ஆட்சேர்க்கையின்போது இத்தகைய தேர்வுகள் நடைபெற்றன. பெண்கள் சேர்ந்துவிடாதபடி பார்த்துக்கொண்டனர்.

Some virus is placing extra unwanted dots in the text area.
Please ignore these dots as you read. You may also point out
in the comments. Errors will be corrected in due course. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.