வள் = வளைவு.
வள்+ தி = வண்டி. ( உருளை பொருத்தியது ).
வாங்கு = வளைவு.
வாங்கு+ அனம் = வா(ங்)கனம்.
வளையம்போன்ற உருளை கண்டுபிடிக்கப் படுமுன்,
ஊர்திகள் (பல்லக்குப் போல ) தூக்கிச் செல்லப்பட்டன. ஆள் தூக்குதல்,
விலங்கு தூக்குதல் எல்லாம் ஒன்றுதான். தூக்க
வசதி இல்லாத நில இறக்கங்களில், “ வண்டிகள்” அல்லது இருக்கைகள் சறுக்க விடப்பட்டன. இதில் கயிறு கட்டி இழுப்பதும் அடங்கும். சறுக்க வசதியாக கீழ்ப்பாகம் அமைக்கப்பட்டது. சறுக்கி அருகில் சென்றது, சறுக்கு+ அரு+ அம் = சறுக்கரம் , இது பின் சக்கரம் ஆனது. அருகுதல் = நெருங்குதல், அண்முதல். அடிச்சொல்: அரு. உருள்வளை அமைந்த பின்னும்
அது சக்கரம் என்றே வழங்கியது.
முதலில்
இருக்கையின் கீழ் அரை வளையமாகப் பொருத்தப்பட்டு, பின் சுற்றும்படி முழு வளையமாக இணைக்கப்பட்டது. நல்லபடி சுற்றும் வளையம் அமைக்கக் காலம்
பிடித்திருக்கலாம்.
ஒப்பாய்வு:-
ஒப்பாய்வு:-
துறக்கம் என்ற சொல் சொர்க்கம் என்றும் பொருள்படும். ஒருவன் துறக்கம் சென்றுவிட்ட நிகழ்வானது இங்குள்ளோருக்குத் துக்கமே ஆகும். ஆதலால்
இச்சொல்லின் இடைக்குறைக்குத் துயரப் படுதல் என்ற பொருள் ஏற்பட்டுவிட்டது.
துறத்தல்:
துற > துறக்கம் > து(ற)க்கம் > துக்கம். இது இடைக்குறைச் சொல்லமைப்பு ஆகும்.
மேலே தரப்பட்ட சறுக்கரம் என்ற சொல்லும் தன் றுகர எழுத்தை இழந்து சக்கரம் ஆனது. இடைக்குறைச் சொல்லமைப்பு.
வாகனம் :
வாங்கு - வளை.
வாங்கு+அன்+அம் = வாங்கனம் > வாகனம். இதுவும் இடைக்குறைச் சொல் அமைப்பு. பின் பிறமொழிகளிலும் பரவிய சொல்.
reviewed.
date: 25.4.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.