எடையில்லாதது தண்ணீரில் மிதக்கும். எடையுள்ளது
அதில் அமிழ்ந்துவிடும்.
உண்மையில் இது எடையற்ற காரணத்தால், ஆங்கிலத்தில்
" லைட்" ( ஹெ வி அல்லாதது) என்பதுபோன்ற கருத்தே
ஆகும்.
உணவு உண்பதில் எப்போதும் மிதமாக இருங்கள் என்று
சிலர் கூறக்கேட்டிருப்பீர்கள்.
எடைக்குறைவைக் குறித்த இந்தச் சொல் பின்னர்
"மூழ்கிவிடாதிருக்கும் அளவில் " என்று பொருள்பட்டு.
பின்னர் அதிகமற்ற, மிகையில்லாத என்ற பொருளுக்கு
வந்தடைந்தது.
மித + அம் = மிதம்.
மித என்பதில் இறுதி அகரம் கெட்டது ( மறைந்தது).
மிதத்தல்; மிதம்.
அமிதம் என்பது எதிர்ச்சொல். அ என்பது அல் என்பதன்
கடைக்குறை. அல் > அ.
அ+மிதம் = அமிதம்.
மெது என்பது மித (மிதத்தல் ) என்பதனுடன் தொடர்புடைய
சொல். சொல்லாலும் பொருளாலும் தொடர்பு உண்டு.
மெது > மெதம் >மிதம் எனினுமாம்.
மெதமாக வாய்ப்பேச்சு இருக்கட்டும்; வெற்றி பெறுவீர்
என்பர்.
மெது என்பது தொடுகையில் மெதுவாயிருத்தலையும்
எடையில் மெதுவாய் இருத்தலையும் வேகத்தில்
மெதுவாய் இருத்தலையும் ஊர்வழக்கில் தழுவும் என்பதை
அறிக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.