பதுமை என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
பொம்மை என்ற சொல்லைப்பற்றி முன்பு ஓர் இடுகையில்
விளக்கியுள்ளோம்.
பதுமை : இச்சொல் பதுக்கு, பதுங்கு, பதுக்கம், பதுக்கை, பதுங்கல்,
என்னும் தமிழ்ச்சொற்களுடன் தொடர்புடையது.
இவற்றின் அடிச்சொல் "பது" என்பது.
பத்ததி, பத்தி, பத்தாயம், பத்தியம், பந்தல். என்பனவும்
தொடர்பு காட்டும் சொற்கள்.
பம்மல் என்ற தொழிற்பெயர், கவித்தல் மூடுதல் என்றும்
பொருள்தரும்.
இவற்றுள் எளிதான ஒரு சொல்லிலிருந்து புறப்படுவோம்.
பழங்காலத்தில் நெகிழிப் பொம்மைகள் கிடையா.. பஞ்சை
உள்ளிட்டுத் துணியால் தைத்து மூடியே பதுமைகள்
செய்யப்பட்டன. பஞ்சு துணிக்குள் பதுங்கி நின்றது.
பதுங்குதலாவது உள்ளமைதல். புலி பதுங்குதல்
பூனை பதுங்குதல் திருடன் பதுங்குதல் முதலியவற்றால்
ஏற்பட்ட செயல்சார் பொருளழகினை விடுத்து அடிப்படை
உள்ளமைதலினை உன்னுதல் வேண்டும் .
பது என்ற அடிச்சொல்லே பதி என்று திரிந்தது.
பெண்வழிக் குடும்ப நிலை ஓங்கியிருந்த காலத்தில்
பெண்ணை மணந்துகொண்டு பெண் வீட்டிலே
பதிந்து வாழ்ந்த மாப்பிள்ளை பதியெனப்பட்டான்.
தம்பதி என்ற சொல் தமக்குள் ஒருவருக்கொருவர்
பதிந்து வாழ்ந்த நிலையைக் குறித்தது. பதிதலாவது
அகத்திருந்து வாழ்தல். தளத்தில் பதிந்து படைகளைக்
கவனித்தவன் தளபதி.
பதுமை > பதுமல் (பது+ம்+அல்) > பம்மல்.
பம்முதல் என்பதும் வினைச்சொல்.
(பதுமை )< (பதுமு ) > பம்மு .> பம்மை > பொம்மை .
பொதியப்பட்டது பொய்.
பொய்ம்மெய் > பொம்மை என்பதும் அது. பொய்
என்ற சொல்லின் அமைப்பை விளக்குங்கால் இது
தெளியும்.
ஏனைச்சொற்களைப் பின்பு அறிவோம்.
அவற்றுள் விளக்குதலுக்குரியவை சில உள.
பம்ப் pump என்ற ஆங்கிலச் சொல்லைக் கவனிக்கவும்.
அங்கு காற்று அன்றோ பதுங்கி உள்ளிருக்கிறது.
பம்முதல் என்ற சொல்லைக் கருதவும்,
பதுமை என்பது மட்டும் அறிந்து பின்வரும் பிறவற்றுக்கு
எதிர்நோக்குக .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.