தழுக்குதல் என்பது ஒரு
பழந்தமிழ்ச் சொல். இது ஒருவன் வாழ்வில் வளம்பெற்று உயர்வதையும்
குறிக்கும். இதன் அடிச்சோல் "தழு " என்பது.
அம் = அழகிய.
தழு = வளமும் உயர்வும். (வினைச்சொல்).
து : விகுதி.
அந்தழுத்து > அந்தஸ்து.
இதில் ஓர் எழுத்து : ஸ் என்பது இடப்பட்டது. அது ழுகரத்துக்குப் பதிலாக.
ழகர வருக்கங்களுக்கு வேற்றொலிகள் நுழைக்கப்படுவது இயல்பான அயற்றிரிபு
ஆகும்.
இன்னோர் எடுத்துக்காட்டு:
அழுத்திவார்தல் : அழுத்திவாரம் > அஸ்திவாரம்.
அஸ்தி வாரம் இடும் இடத்தில் அழுத்திவாரவேண்டும். அதுவே கருத்துக்
சொல்லமைப்புக்குக் காரணமும் ஆகும்.
அந்தஸ்து என்பதற்கு மற்றோர் முடிபும் கூறுதல் அமையும்.
அம் - அழகிய;
தகம் - தகு+ அம்; அதாவது தகுதி.
அம்+தகம்+து = அந்தகத்து > அந்தஸ்து.
அதாவது அழகிய தகவு உடைய நிலை.
எங்கனமாயினும் இது தமிழிலிருந்து தோன்றித் திரிந்த சொல் என்பது
தெளிவு.
ழு அல்லது க வுக்குப் பதில் ஸ். அவ்வளவுதான் திரிபு.
அந்தஸ்து என்பதற்கு மற்றோர் முடிபும் கூறுதல் அமையும்.
அம் - அழகிய;
தகம் - தகு+ அம்; அதாவது தகுதி.
அம்+தகம்+து = அந்தகத்து > அந்தஸ்து.
அதாவது அழகிய தகவு உடைய நிலை.
எங்கனமாயினும் இது தமிழிலிருந்து தோன்றித் திரிந்த சொல் என்பது
தெளிவு.
ழு அல்லது க வுக்குப் பதில் ஸ். அவ்வளவுதான் திரிபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.