துடிப்புடன் திரைதனில் தோன்றிச் சுவைஞரை
நடிப்பதன் அழகில் கவர்ந்தநட்
சத்திரம்
நெடித்தலொன் றிலாத உழைப்பினர் தாமுமே
பிடித்தமே லிடத்தினைப் பெயரா திருந்தவர்.
மூவா அகவையில் முன்னிறப் பெய்திசீ
தேவி உலகினைத் தேம்பிட வைத்தனர்
ஆவி அமைதியை அடைக குடும்பமும்
மேவு துயர்க்கினி இரங்குமெம் நெஞ்சமே.
அரும்பொருள்:
சுவைஞர் = இரசிகர்கள்.
நெடித்தல் = காலம் கடத்துதல். செய்வதைச்
செய்ய நாட்கடத்துதல்.
பெயராது = இழந்துவிடாமல்.
மேலிடம் = அந்தஸ்து
மூவா அகவை = மூப்பு அடையாத (இள) வயது
இறப்பெய்தி - மரணமடைந்து.
முன்னிறப்பு - அகால மரணம்
தேம்புதல் - கலங்குதல்.
மேவு துயர் - அடைந்த துக்கம்
ஸ்ரீ
அரும்பொருள்:
சுவைஞர் = இரசிகர்கள்.
நெடித்தல் = காலம் கடத்துதல். செய்வதைச்
செய்ய நாட்கடத்துதல்.
பெயராது = இழந்துவிடாமல்.
மேலிடம் = அந்தஸ்து
மூவா அகவை = மூப்பு அடையாத (இள) வயது
இறப்பெய்தி - மரணமடைந்து.
முன்னிறப்பு - அகால மரணம்
தேம்புதல் - கலங்குதல்.
மேவு துயர் - அடைந்த துக்கம்
ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.