போர்களிலே தாம்குண்டு போடுவார்கள் இங்கென்ன
புதுமணத் தம்பதிகள் நாமே! - இந்தப்
பூதலத்தில் நாமிணைந்தோம் காதலினால் கட்டுண்டோம்
ஏதினியே வாழ்வில் இன்னல்?
என்றபடி போகமிழை புத்தம்புது இல்லமதில்
இருந்தபடி எக்காளம் இட்டு -- அங்கு
வந்தபரி சுப்பொருள்கள் வாரியிட் டுப்பிரித்தார்
வன்`குண்டே வெடித்த தங்கே
மணமகற்கு வந்துற்ற மாதுயரை என்சொல்வோம்
மரித்துவிடப் பெண்ணும் ஆங்கு --- உயிர்
பிணத்திற்குப் பக்கலிலே காயம்பெரி தாய்ப்பட்டு
பிழைப்பாளோ என்ன வீழ்ந்தாள்
மணத்திற்கு வாங்காதீர் மகிழ்ச்சியால் எப்பரிசும்
மாநிலமே வீணர் வாழும்---- ஒரு
குணத்திற்கு வாழாத கூழ்க்கலமே
ஆயிற்றே
குற்றநெறி உற்றழிந் ததே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.