Pages

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

நாளிதழ் வாக்கியங்கள் காதுக்கெட்டிய பதில்கள்



வாக்கியமும் கேள்வியும்
எழுத்தில் தோன்றும் சில கருத்துகளும்  அவற்றில் புறப்படும் கேள்விகளும்.

1    அவர் தனிமனிதரல்ல;  அவர் நம் இனத்தின் சொத்து. அவரை அடிக்கக்கூடாது. 

அவர் பொதுமனிதர் என்றால் அவர் உயர் திணையாகவே இருக்கிறார் என்று பொருள்.  அவர் சொத்தாகிவிட்டால் அஃறிணையாகிவிடுகிறார். தனிச்சொத்தானாலும் பொதுச்சொத்தானாலும் விலைப்பொருளாகிவிடலாம். அவரை விற்றுவிட நீங்கள் ஒப்பினால், நாங்கள் வாங்கிக் கொண்டுபோய் அப்புறம் அடிக்கிறோம்.

2  சிலர் தங்கள் சுயநலத்திற்காக அவரை அடிப்போம் என்`கிறார்கள்.

அப்படியானால் பொதுநலத்திற்காக அவரை அடிப்போம் என்று சொல்வது சரி என்`கிறீரோ?

3  எல்லா நதிகளையும் நான் இணைப்பேன்.

உம் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைத்தாலே அது பெரிய காரியம்.  அடுத்தமாநில நதியை இணைக்க அவர்கள் இணங்கவேண்டுமே!

4  எல்லா அரசியல் கட்சிகளையும் இணைத்தால் நதிநீர் கிடைத்துவிடும்.

அப்படியா? இந்த அரசியல் கட்சிகளில்தான் நதிகள் ஓடுகின்றனவோ?

5  நிறைய இளைஞர்கள் கூடுகிறார்கள்.  இப்போது       விழிப்புணர்வு  ஏற்பட்டுவிட்டது.

ஒரு யானையைப் பார்க்கவும் கூட்டம் கூடுகிறது.  யானையைப் பற்றிய விழிப்பும் ஏற்பட்டுவிட்டது. இனி யானைகளுக்கு நல்ல நேரம்தான்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.