Pages

புதன், 27 டிசம்பர், 2017

மகனுக்கு நாய்த்தட்டில் உணவு.......!



நாய்த்தட்டில் சோறுபோட்ட தாய்

எனக்குத் தெரிந்த ஒரு தமிழர் வீடு.   இங்கு வாழ்ந்த குடும்பத்தில்  பிள்ளைகள் ஒரு பெண். ஓர் ஆண். இந்தப் பெண் நன்`கு படித்துப் பல்கலைக் கழகத்திற்குப் போய்ப் பட்டம் பெற்றுவிட்டாள். இப்போது நல்ல வேலையில் இருக்கிறாள்.  அந்த ஆணோ தொடக்கப்பள்ளியிலிருந்தே படிப்பில் கோழிமுட்டை வாங்கத் தொடங்கிவிட்டான்.

இவன் படித்த பள்ளியில்,  மலாய்ப் பிள்ளைகளும் சீனப் பிள்ளைகளும் இந்திய மாணவருடன் படித்தார்கள்.  இவன் தொடர்ந்து தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்ததால் பள்ளித் தலைமையாசிரியர் “ மாற்றத்தைக் காட்டாவிட்டால் வெளியில் அனுப்பிவிடுவேன்” என்று எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில் இவன் வகுப்பில் படித்த ஒரு மலாய்ப் பிள்ளையின் எழுதுகோலை ( பேனாவை)த் திருடிவிட்டதாகத் தெரியவந்து, பள்ளியை விட்டு நீக்கிவிட்டார்கள்.

இவன் தாய் சென்று மன்றாடினாள்  தலைமை ஆசிரியரிடம்.  இருந்தாலும் இவன் தாயின் கதறலை அங்குள்ளோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலேதும் தவறில்லை என்றே தெரிகிறது. ஆனால் அவன்மேல் சிறுவர் நீதிமன்றத்தில் வழக்குப் போடாமல் அனுப்பிவைத்து ஓர் உதவியைச் செய்தனர்.

ஒன்றும் முடியாமற் போகவே,  தாய் மகனை நன் `கு வைதாள். அன்று சோறு கேட்ட போது நாய் சாப்பிடும் தட்டில் அவனுக்குப் பரிமாறப்பட்டது என்று அவன் கூறி அழுதான். அவனுக்கு ஆறுதலாக, “ நீ படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் இப்படி நடவாது:" என்றுமட்டும் சொல்லிவைத்தேன்.

இவன் திருந்தவில்லை. இவன் இனிப் படிக்க மாட்டான் என்று வண்டிகள் கழுவுவோர்க்கு எடுபிடி வேலை செய்ய அனுப்பினர்.  அங்கும் ஒழுங்காக வேலை செய்யாமல்,  திருடர் கூட்டத்துடன் சேர்ந்து.
திருடப்போன இடத்தில் பிடிபட்டு, வழக்கும் நடந்து சிறை சென்றான்.  

இப்போது அவன் பெரிய திருடன். வீட்டுக்கு வருகிறேன் என்று ஒரு கடையில் கண்டு என்னைக் கேட்டபோது, நானதற்கு சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொண்டுவிட்டேன்.  வேலைக்குப் போகாமலே நல்லபடி உந்துவண்டி ஓட்டுகிறான். சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கேள்வி.

மலேசியாவில் பெண்பிள்ளைகள் நன்`கு படித்துப் பலர் நல்ல வேலை செய்கிறார்கள்.  ஆண்கள் ஏன் இப்படி வீழ்ந்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. யானறிந்த ஒரு மலாய்க்குடும்பத்திலும் பெண் படித்து நீதிபதியாக இருக்கிறாள். பையன் அலுவலக எடுபடியாக வேலைபார்க்கிறான்.

வீழ்ச்சியடைந்த  ஆண்மக்கள் இந்தியரிடையே அதிகம்.

Please note that a foreign programme has changed spelling
and inserted dots in places resulting in errors.  We have corrected
those detected. They  (errors) may appear in other places again
in the text.  Please read with caution and you may inform us
through the comments column.  Sorry about this.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.