இறுதி இடையின எழுத்துக்கள் வீழ்ச்சி;
இடையின எழுத்துக்கள் ய ர ல (வ)% ழ ள.
இவ்வெழுத்துக்கள் வகர ழகர ஒற்றுக்கள் நீங்கலாக சொல்லின் இறுதியில்
ஒற்றெழுத்துக்களாய் வருங்கால், அவை கெடும் ( அதாவது விடப்படும் ). இது பெரும்பாலும் பேச்சிலே நிகழும். எழுத்திலும்
வந்து சொற்கள் திரியும்.
1.கொய்யாக்காய் > கொய்யாக்கா.
இதில் யகர ஒற்று (ய்) ஒழிந்தது.
நாய் - நே; பாய் - பே;
தாய் - தே என்றும் ஒருமாதிரியாய் இழுத்துப்
பேசுவோருமுண்டு.
எண்ணெய் > எண்ணெ; பண்ணை > பண்ணெ;
ஐ என்பது அய் போலும் யகர ஒற்றிழந்து எகரமாகும்.
2. தண்ணீர் > தண்ணி.
இதில் ரகர ஒற்று ( ர்) ஒழிந்தது.
3, பந்தல் > பந்த. செய்தால் >
செய்தா.
இங்கு லகர ஒற்று வீழ்ந்த்து.
4. அவள் > அவ; அவ்வாள்
> அவா.
5. இனி ழகர ஒற்று: இது சொல்லிடை வீழும்.
வாழ்க்கைப்படு
> வாக்கப்படு.
வாழ்த்தியம் > வாத்தியம்.
சூழ்து > சூது. ( நன்`கு ஆலோசித்து விளையாடுவது ). சூழ்தல் - ஆலோசித்தல்.
ழகர ஒற்றுக்கு ஒரு ரகரம் தோன்றும்:
அவிழ் > அவுர்.
6, வகர% ஒற்று சொல்லிறுதியில் வருவதில்லை.
சொல்லிறுதிக்கு இரட்டித்து ஒரு உகரச் சாரியை போலும் வந்து முடியும். இதை சொல்லாக்க
விகுதி எனலாம்.
கவ் ( ) > கவ்வு. வு : விகுதி.
கவ் என்பது சொல்லாகக் கருதப்படுவதில்லை.
கவ் > கவ. கவ் > கவிழ் கவ் > கவர். ஆகவே கவ் என்பதைப் பிறைக்கோட்டுக்குள் இட்டுக் காட்டலாம். (கவ் )>
சீனமொழியில் இது கா என்று நீளும்.
அறிந்து மகிழ்வீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.