மழைத்துளியே என்மேல் கொஞ்சம் படு;----முற்றும்
மருவாமலே தண்மை உருவாகவே உன்னை இடு;
உழைத்தனியே இனிதே காண
விடு --- வந்து
உறவாடவே நெஞ்சம் இனிவாடுதல் ஆமோ தடு.
விளைத்தனையே இன்பம் ஈடொன் றிலை ---- உன்னை
விழையாமலே மண்ணில் உழல்சோர்விலே
உயிர்கள் பல .
களைத்தவரே துள்ளி முன்னுற்
றெழ ----
பொழிவாய்
கணமேனுமே துளிகள் படவேணுமே
தண்மை பெற.
உழை = பக்கம்.
ஆமோ = ஆகுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.