விமலா என்பது அழகான ஒரு பெண்ணின் பெயர்
இப்போது இந்தப் பெயர் உள்ளவர்கள் பலர் உள்ளனர்.
கடுமை மிக்க இலக்கணம் படித்த புலவருக்குச் சில வேளைகளில் புரியாதுதான்.
சொற்களை எடுத்து வெட்டி ஒட்டிக் கட்டி அரைத்துக் குழைத்துk கரைத்து
ஊற்றவேண்டும். இலக்கணத்துக்குள்ளேயே இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது. புதுச்சொற்களை
உருவாக்கி விட்டு அதை உலகின் வேறு ஏதாவது ஒரு மூலையில் உள்ள ஒரு மொழியின் பெயரைச் சொல்லி
அந்த மொழியினுடையது எனல்வேண்டும். அவனால்
கண்டுபிடிக்க முடியாது.
இப்படி அருகில் உள்ளவனைச் சுற்றிவிடுவதும் ஓர் ஆன்ந்தம்தான்.
னாம்@ அதைக் கண்டுபிடிக்க முயன்று அல்லல் படுகிறோம்.
விழு மலர் என்றால் விழுமிய மலர்; சிறந்த மலர்.
மலர் என்பதை மலா என்று மாற்றுக.
விழு என்பதில் ழுவை வெட்டி எறிக.
விமலா என்ற அழகிய சொல் கிடைத்துவிட்ட்து.
இப்படிப் பிற மொழியினரும் பெயர்களை அமைக்கிறார்கள்>
பெயரில் ஒரு நல்ல பொருளிருக்கவேண்டும் என்பது தமிழர் கொள்கை; இந்தியர்
கொள்கையும்கூட.
நல்ல ஒலிநயம் போதும்;
கவர்ச்சி வேண்டும் என்று நினைப்போர் உலகில்
பலர்.
பெயர் அடையாளத்துக்கு இடப்படுவது. இதில் பொருள்கண்டு என்ன செய்யப்போகிறாய் எங்கிறான்
ஒருவன். அவனவனுக்கு அது அது சரி.
@ இது பின் திருத்தப்படும். எழுத்துருவாக்கி வேலை செய்யவில்லை/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.