தொடர்வண்டி அமைச்சகமே
செய்கிறதா ஏதும்?
தொலைந்துவிட்ட
உயிர்கள்பல தோன்றும்பரி தாவம்!
இடர்தவிர்க்க விபத்துகளே
இல்லாமல் ஆக்க
எத்தனித்து வெல்லாமை
பற்றிவரும் சாவம்!
படர்கடமை பலப்பலவே
என்றாலும் பார்க்கப்
படவேண்டும் என்பனவாம்
விடினதுவோ பாவம்!
பிடர்முறிக்கும்
நோவினையே பின்போட்டுக் கொண்டு
பெருங்கடன்கள்
முடித்திடினும் அருங்கவின் இல் ஓவம்
இறந்தோர்க்கு எம்
இரங்கல்.
காயமுற்றோர் நலம்
விரைந்து பெறுக..
அரும்பொருள்.
தொடர்வண்டி - train
பரிதாவம் - பரிதாபம்.
(பரிதாவம் என்பது பரிந்து தவித்தல். வகர பகரத் திரிபு.
பரிமாற்ற வசதி மொழியில் உண்டு ).
சாவு+ அம் = சாவம் > சாபம்.
விடினதுவோ - எந்த ஒன்றை விட்டாலும். ( அது என்பது தொடர்வண்டித் துறையைக் குறிக்கிறது.)
பாவம் என்பது பாபம் என்றுமாகும்.
பிடர் - பிடரி.
பின் - முதுகு.
கடன்கள் - கடமைகள்.
அருங்கவின் - அரிய அழகு.
இல் = இல்லாத
ஓவம் - ஓவியம்.
ஒரே சமயத்தில் இரண்டு விபத்துகள் நடைபெற்றிருப்பதால் இது
வெளிவேலையாக இருக்கவும் கூடும். இருப்புப் பாதைக் கண்காணிப்பு
இரட்டிப்பாக்கப்படவேண்டியது முன்மையான கடமையாகிறது. இது எளிதன்று என்றாலும் செய்தற்குரியது. நல்லவேளையாக யாம்
இவ்விடங்க்ளுக்குப் போவதைத் தவிர்த்துவிட்டோம். நன்மையே
நிகழ்வதாக.
தீவிரவாதிகள் எங்கு எப்படி ஊடுருவுகிறார்கள் என்பது கண்டுபிடிக்கக் கடினமான வேலை. இருந்தாலும் கவனிக்கவேண்டியது ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.