பல்லோர்க்கு வாழ்வாக்கும்
சிங்கை;--- என்றும்
பாரினிலே மேலோங்கித்
தங்கும்;
நல்லோர்க்குக்
காப்பாகும் நங்கை --- எந்த
நாவினரும் போற்றுவரே
எங்கும்..
ஐம்பத்தி ரண்டாகும்
ஆண்டில் --- இவள்
ஆர்ந்தபுகழ் எல்லாமும்
ஈண்டிப்,
பைம்பொன்னாய் நல்லொளியே
உற்றுச் --- செய்யும்
பணியாவும் கனியாதல்
பெற்றாள்
முன்னோடி வாழ்குடியில்
யார்க்கும் --- இங்கு
மூள்கின்ற நோய்மிடிகள்
தீர்க்க,
தன்னாலே முன்வந்து
நன்மை --- கண்டு
தக்கவழி செய்சிங்கை
உண்மை.
நன்னாடு சிங்கைமிக
வாழ்க ---- எம்மை
நாடிவரும் துன்பமெலாம்
வீழ்க!
விண்ணாடு மேகங்கள்
பெய்க --- மக்கள்
வென்றாடு மன்றேறி
உய்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.