Pages

திங்கள், 17 ஜூலை, 2017

மர் - அடிச்சொல்.

ஒரு சொல்லுக்கு என்னபொருள் என்பது தெரிந்தாலே
 நாம் அதைப் பயன்படுத்த முடிகிறது. பயன்படுத்துதலாவது: 
நாம் அச்சொல்லைப் பயன்படுத்துவதும் பிறர் பயன்படுத்தியதைப் புரிந்துகொள்வதும் என இருவகை ஆம். பொருள்
 தெரியாதபோது எழுப்பப்பட்ட ஒலி ஒரு வெற்று ஒலியே 
அன்றி வேறில்லை. நமக்குப் புரியாத மொழியிற் பிறன் பேசினால்
எழுந்த ஒலிகள் எந்தத் தாக்கத்தையும் நம்மில் 
ஏற்படுத்துவதில்லை. அவன் என்ன சொல்கிறான் 
என்று தெரிந்தவனிடம் கேட்டு அறிந்துகொள்ளும் 
ஒரு நடவடிக்கையை  மட்டுமே 
மேற்கொள்ள முடியும்,   ---  அதுவும்  தேவையானால்.

நம் மொழியிலே நாம் பயன்படுத்தும் சொல்லுக்கே 
என்ன அதன் உரிய பொருள் என்று நமக்கு சிலவேளைகளில் புலப்படுவதில்லை. ஒவ்வொரு சொல்லும் ஏன் 
அதன் பொருளைப் பெற்றது என்பது சில வேளைகளில் 
தெரிந்தாலும் சிலவேளைகளில் தெரிவதில்லை. 


மரம் என்ற சொல்லை  நாம் பயன்படுத்த அறிந்திருந்தாலும் 
அதற்கு ஏன் அந்தப் பெயர் என்று அறியோம். எனவேதான் 
"மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் 
தொல்காப்பியனார். 

பண்டைத் தமிழர் உணர்ச்சி அற்றனவாகக் கருதியவற்றை
 மரம் என்றனர். குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்
என்ற ஒளவையார் கூறுவதால் இதுவே சரியான
காரணமாம்.கால் மரத்துப்போய்விட்டது என்ற
 வழக்கை நோக்குக.மரத்தல் என்பது வினைச்சொல்.
 ஆனால் இன்றைய அறிவியல் மரங்களுக்கும்
உணர்ச்சி உண்டென்று கூறுகிறது.
இருந்தாலும் பெயர்க்காரணங்களில் நாம் மாற்றமுரைத்தல்
இயலவில்லை.

காரணம் அறிந்த பெயர் காரணப்பெயர் என்றனர். 
 காரணம் அறியாப் பெயர் இடுகுறிப்பெயர். நாற்காலி 
என்பது காரணப்பெயர் என்றாலும் நாலு கால் உடைய
எல்லாம் நாற்காலி அல்ல‌. நாய்க்கும் நாலு கால் இருந்தாலும்
அது நாற்காலி ஆகாது. இத்தகைய சொற்களை
காரண இடுகுறி என்றனர்.



மர் என்பது அடிச்சொல்.
மர் + அம் = மரம். 2
மர > மரத்தல்.
மர் + அணை = மரணை > ஸ்மரணை.
உணர்ச்சியற்ற நிலையால் அணைத்துக்கொள்ளப்படுதல். 1
அணைத்தலாவது அண்மிச்செல்லுதல்.
மர் > மரித்தல்.
மர் + அணம் =மரணம்.
மர் _> மரி + அணம் = மரணம் எனினுமாம்.
மரி + அகம் = மாரகம் (மரணம்).  முதனிலை திரிந்த (நீண்ட) தொ.பெயர்


1.   ஒ.நோ:  தீண்டு > தீட்டு   :.தீண்டின் ஏற்படும் நிலை.
          தீண்டு > தீட்டம் ( மலையாளம்)  தீண்டவொண்ணாதது.  
உணர்ச்சியுண்மையும் அஃது இன்மையும் ஒரே அளத்தலின்  இருகோடிகள்>
ஆகையால் மரி என்ற சொல்லினின்று  ( ஸ்மரணை.)  புனைந்துள்ளனர்.

2 உடல் கட்டை என்று சொல்லப்படும்.

If this post does not appear good on your screen, we are sorry. Edit features are not available now. Will make good later.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.